Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

WWE சாம்பியன் டைட்டிலுக்காக, ரேண்டி ஆர்டனுடன் மல்லுக்கட்டும் இந்தியர்!

WWE ரெஸ்ட்லிங்கில், கிரேட் காலியைத் தொடர்ந்து கலக்கிவரும் மற்றொரு இந்தியர், ஜிந்தர் மஹால். இவர் தற்போது மல்லுக்கட்டுவது, ரேண்டி ஆர்டனுடன். அவருடன் WWE சாம்பியன் டைட்டிலுக்காக, ஜிந்தர் மல்லுக்கட்டுகிறார். ரேண்டி ஆர்டன், 13 முறை WWE சாம்பியன் என்ற பெருமையுடன் கெத்து காட்டிவருபவர்.

Jinder Mahal


இந்நிலையில், வருகின்ற 21-ம் தேதி நடக்கும், 'WWE Backlash PPV' நிகழ்ச்சியில், WWE டைட்டிலுக்காக இருவரும் மல்லுக்கட்ட உள்ளனர். இதற்கிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற 'ஸ்மேக் டவுண்' நிகழ்ச்சியில், ரேண்டி ஆர்டனின் WWE சாம்பியன் பெல்ட்டை எடுத்துச் சென்று, 'நான்தான் அடுத்த  WWE  சாம்பியன்' என்று கெத்து காட்டிவருகிறார்.

Jinder mahal


ஆனால், WWE ரெஸ்ட்லிங்கிற்கு, இந்தியாவில் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்துவருகிறது. இதனால்,  'WWE India' என்ற இந்திய இணையதளத்தைத் துவக்கத் திட்டமிட்டுவருகிறார்களாம். எனவே, ரசிகர்களை மேலும் கவர்வதற்காகவே, ரேண்டி ஆர்டனுடன் ஜிந்தர் மஹால், மோத வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்,  WWE டைட்டிலுடன் ஜிந்தர் மஹால் எடுத்துள்ள போட்டோக்கள், வைரலாகிவருகின்றன.

படங்கள் : WWE

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement