Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திராவிட மொழிகளுக்கு பெருங்கொடையளித்த பிதாமகன்! கால்டுவெல் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

கால்டுவெல்

வாசிப்புப் பழக்கம் இல்லாமல் மாணவன் உயர்மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும்; ஆனால், எதனையும் விரிவாக அறியாமல், தன் பாடத்திட்டத்தில் மட்டும் திருப்தி கொண்டுவிடுவான்'' என்றார் ராபர்ட் கால்டுவெல். வாசிப்புமேல் அவருக்கு இருந்த காதல்தான், 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்கிற நூலை எழுதவைத்தது. தமிழ்மொழிக்குச் 'செம்மொழி' என்ற சிறப்பைத் தேடித்தந்த அந்தப் பெருமகனாரின் 203-வது பிறந்த தினம் இன்று.

இளமைக்காலம்!

1814-ம் ஆண்டு மே 7-ம் நாள், அயர்லாந்து நாட்டின் கிளாடி ஆற்றங்கரையிலுள்ள பெல்பாஸ்ட் என்ற சிற்றூரில் பிறந்தவர் ராபர்ட் கால்டுவெல். இளமையிலேயே தரமான கல்வியை அளிக்க அவருடைய பெற்றோர் முடிவெடுத்தனர். அதன் காரணமாகத் தங்களது தாயகமான தாய்லாந்துக்கு கால்டுவெல்லை அழைத்துச் சென்றனர். பள்ளிக்கல்வியைத் தொடர்ந்த அவர், ஆர்வத்தின் காரணமாக இளமையிலேயே ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்று விளங்கினார். அதோடு ஓவியக்கலையையும் கற்றுத் தேர்ந்தார். அதன் பின்னர், சமய நூல்களையும், மொழியியல் நூல்களையும் தேடித்தேடி படிக்கத் தொடங்கினார். கிரேக்க மொழியில் தொடங்கிய அவரது ஆர்வம் தமிழின் மீது தணியாத காதலை ஏற்படுத்திக்கொண்டது. 

தமிழின் மீதுகொண்ட காதல்!

1838-ல் சமயப்பணி தொடர்பாக இந்தியா வந்த அவர், கப்பலில்... பிரௌன் என்பவருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாகத் தமிழைக் கற்றுக்கொண்டார். தமிழின் அழகியலை அறிந்த அந்த அறிஞர் பெருமகனார், தமிழைக் கற்பதற்காகச் சென்னையில் சில காலம் தங்கி மொழியைத் திறம்பட பயின்றதாக நூல்கள் சொல்கின்றன. வட்டார வழக்குமொழிகளைக் கொண்டது தமிழ் என்பதால், பேச்சு வழக்கை அறியவும், அதன் மூலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளவும் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டார் கால்டுவெல். திருச்சி, சிதம்பரம், நீலகிரி, நாகப்பட்டினம் போன்ற பல்வேறு  மாவட்டங்கள், பிற ஊர்கள், மலைக்கிராமங்கள் என தனது பயணத்தை வடிவமைத்துக்கொண்டு தமிழ் மொழியில் உள்ள வட்டார மொழிகளைக் கண்டறிந்தார்.  

அந்தத் தேடலின்போது, 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' என்ற நூலை எழுதினார். அதில், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் பற்றிய பதிவுகள், ஆங்கிலேயர் வென்ற நிகழ்வுகள் போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, மொழியியல் நடையில் எவ்வாறு மற்றமொழிகளில் தமிழின் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அவர் கூறியுள்ளார். தமிழில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் எவ்வாறு கிரேக்க மொழியில் திரித்துக் கையாளப்பட்டுள்ளது என்பது பற்றியும் அந்த நூலில் தெரிவித்துள்ளார்.

ராபர்ட் கால்டுவெல்

ஆய்வியலும்... கட்டுரைகளும்! 

சிங்கள இலக்கிய நூலான 'மகாவம்சம்' என்ற நூலின் துணைக்கொண்டு தமிழ் - ஈழ உறவுகளையும் ஆய்வு செய்துள்ளார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில திருந்திய மொழிகள், திருந்தாத மொழிகள் ஆகியவற்றைக் கண்டறிந்தவரும் ராபர்ட் கால்டுவெல்தான். பின்னர் தாம் கண்டறிந்தவற்றைக் கட்டுரைகளாகவும் வெளியிட்டார். 

மக்களின் பழக்கவழக்கம், பண்பாடு, கலாசாரம், வாழ்கை முறை போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியியல் தரவுகளை தமது பயணத்திலேயே சேகரித்தார். அது மட்டுமன்றி, பல்வேறு மொழியியல் அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து அதில் இருந்து குறிப்புகள் எடுத்து ஒப்பிட்டுமுறை செய்து, ஆய்வுக் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார். பின்னர் அவற்றை எல்லாம் தொகுத்து 1856-ல், 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

"தன்னிடையே இடம்பெற்றிருக்கும் சொற்களை அறவே ஒழித்துவிட்டுத் தனித்து உயிர் வாழ்வதோடு... அவற்றின் துணை, சிறிதும் இல்லாமல் வளம்பெற்று வளர்வதோடு முன்பிருந்த நிலையிலும் சிறந்த உயர் தனிச் செம்மொழியாக நிலைபெறும்'' என்றார் கால்டுவெல். அவர் சொல்லிய அந்தஸ்தோடு செம்மொழியாக நிலைபெற்றது தமிழ்.

ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அன்பு!

தமிழோடு மட்டும் அவருடைய உறவு முடிந்துவிடவில்லை. தமிழ் மக்கள் மீதான அன்பும் காட்டாற்று வெள்ளம்போல் அவர் நெஞ்சில் பாய்ந்தோடியது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது மிகுந்த அன்புகொண்டிருந்ததாக நூல்கள் கூறுகின்றன. ஆங்கிலக் கல்வி படித்துவிட்டு உயர்சாதி பிரிவினிரிடம் பணியாற்றலாம் என்ற காலகட்டம் அப்போது இருந்தது. ஆனால், கால்டுவெல் ஒடுக்கப்பட்ட மக்களின் மத்தியில் பணியாற்றவே விரும்பினார். ஒடுக்கப்பட்ட மக்களைக் கல்வியறிவு பெறச் செய்வதற்கு பெரும் பணியாற்றியுள்ளார்.

''சமஸ்கிருதம்தான் மொழிக்கான தலைமையானது'' என்று வட மொழி ஆசிரியர்கள் பலரும் கர்ஜித்துவந்த நிலையில், ''காலம் காலமாகத் திராவிடர்கள் (தமிழர்கள்) பேசிவந்த மொழியே தமிழ்மொழி. அந்தமொழி மிகவும் தொன்மையானது'' என்று ஆய்வுகளின்படி வெளியிட்டார். இப்படித் தமிழுக்கும், திராவிடத்துக்குமான நெருங்கிய பந்தத்தை மிக அழகாக உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமகனார் கால்டுவெல்.

கால்டுவெல்

மதமும் மொழியும் தடை இல்லை!

செயற்கரிய காரியங்களைச் செய்யவும் பிற உயிர்களை நேசிக்கவும் மதமும் மொழியும் அவசியம் இல்லை என்பதை உணர்த்தியவர். எந்த மொழியும் நம் மொழியே எந்த மனிதரும் நமது உறவே என்ற தொடர்பை ஏற்படுத்தியவர் அந்தத் தமிழ்மகன். தமிழ்மொழியோடு சுவாசம் கொண்டிருந்த அவர், கடுங்குளிர் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு 1891-ல் ஆகஸ்ட் 28-ம் தேதி இயற்கை எழுதினார். 

தான் சார்ந்த மொழிகளை முழுமையாக அறியாதவர்களுக்கு மத்தியில் அறிந்துகொள்வதற்கும்,தெரிந்துகொள்வதற்கும் ஆர்வம் மட்டுமே அடி நாதம். அந்த நாதமானது எத்தனை  கடினப் பயணங்களையும், சரியான பாதைகளாக மாற்றும் என்பதில் உறுதிகொண்டவர் கால்டுவெல். அவருடைய அந்த உறுதிதான் மொழியியல் ஆய்வுக்கு துணையாக அமைந்தது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close