Published:Updated:

நீட் தேர்வு : மாணவிக்கு நிகழ்ந்த அவலம்.. மக்கள் கொந்தளிப்பு!

அஸ்வினி.சி
நீட் தேர்வு : மாணவிக்கு நிகழ்ந்த அவலம்.. மக்கள் கொந்தளிப்பு!
நீட் தேர்வு : மாணவிக்கு நிகழ்ந்த அவலம்.. மக்கள் கொந்தளிப்பு!

கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவியின் உள்ளாடையை சோதனைக்காகக் கழற்றச் சொன்ன சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான விதிமுறைகளுடன் நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.சிக்கு எதிராக மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.


 

மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வை நாடு முழுவதும் 11.35 லட்சம் மாணவ,மாணவிகள் எழுதினார்கள். சி.பி.எஸ்.சி மேற்பார்வையில் நடைபெற்ற  இந்தத் தேர்வுக்காக, இந்தியா முழுவதும் 103 மையங்கள் அமைக்கப்பட்டன. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பின்வரும் ஆடைக் கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டன..

*பெல்ட், தொப்பி, மோதிரம், தோடு, மூக்குத்தி, செயின், செயின் டாலர், சட்டை பின்,  பேட்ஜ்  போன்றவற்றை அணிந்து வரக் கூடாது. 
*அரைக் கை வைத்த லேசான ஆடைகளையே அணிந்திருக்க வேண்டும். ஆடையில் பெரிய பொத்தான்களோ, பின்களோ, பூக்களோ இருக்கக் கூடாது. ஷூ வகைக் காலணிகளுக்கும் தடை.

மேற்கூறப்பட்டுள்ள விதிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்த போதிய தகவல் கிராமப்புறத்திலிருந்து தேர்வெழுத வந்த மாணவர்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. இதனால் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்த பின்பு சட்டையைக் கிழித்து தேர்வு எழுதச் சென்ற அவலம் நேரிட்டது. அதிகப்படியான சோதனை நடவடிக்கையால் நாட்டின்  பல்வேறு இடங்களில் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தேர்வு அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி ஒருவர் செய்தியாளர்களிடம், ’சோதனையின் ஒரு பகுதியாக என் உள்ளாடையைக் கழற்றச் சொன்னது எனக்கு வேதனையளிக்கிறது’ என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.