Published:Updated:

’மும்பை தாக்குதலில் பாக்.தொடர்பு நிரூபணம்’

’மும்பை தாக்குதலில் பாக்.தொடர்பு நிரூபணம்’
’மும்பை தாக்குதலில் பாக்.தொடர்பு நிரூபணம்’
’மும்பை தாக்குதலில் பாக்.தொடர்பு நிரூபணம்’

புதுடெல்லி: மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதை டெல்லியில்  பிடிபட்ட  தீவிரவாதி அபு ஜிண்டால் ஒப்புக்கொண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர்   ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த  அவர்,மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி அபு  ஜூண்டாலை ஒரு வருடத்துக்கும் மேலாகத் தேடி வந்ததாக தெரிவித்தார்.

அபு ஜூண்டாலை தேடிப்பிடித்து கைது செய்ததற்காக உலகமே இப்போது இந்தியாவுக்கு  பாராட்டு தெரிவிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

அபு ஜூண்டால் சவூதியிலிருந்து வந்தபோது டெல்லி விமானநிலையத்தில் ஜூன் 21-ம்  தேதியே கைது செய்யப்பட்டு விட்டார்.ஆனால் அவர் கைது செய்யப்பட்ட விவரத்தை 25  ம் தேதிதான் டெல்லி போலீசார் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் மறுப்பு

இதனிடையே மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதாக அபு ஜிண்டால்  ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுவதை பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரான ரஹ்மான்  மாலிக் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,”இந்தியாவில் நிகழ்ந்த  தீவரவாதச் செயல்களில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஈடுபட்டதில்லை.  மேலும் டெல்லியில் கைது செய்யப்பட்ட அபு ஜிண்டால் பாகிஸ்தானியர் அல்ல.அவரின்  வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.பாகிஸ்தான் ஒருபோதும் தீவிரவாத  செயல்களில் ஈடுபடாது என்றார்.

தீவிரவாதிகள் குறித்து ஆதாரங்கள் என இந்திய அளித்தவற்றை ஏற்றுக் கொள்ள  முடியாது. மேலும் தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானின் அரசுக்கும் தொடர்பிருக்கிறது  என்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறிய கருத்துக்கு கடும் கண்டனம்  தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.