Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அது ஏன் கண்டதும் காதலிக்கிறோம்? காரணம் இருக்குங்க! #Love

சினிமாவில்தான் பார்த்த உடனே  காதல் வரும்... ரியல் லைஃபில் அப்படி  நடந்தால் அதை `சினிமாத்தனம், `சினிமா பார்த்துக் கெட்டுப்போயிட்டேன்'னு சொல்வாங்க. ஆனால், அப்படி நடப்பது மனித இயல்புதான்னு சொல்றார் கார்ல் யுங்.

காதல்

உளவியல் தொடர்புடைய கட்டுரைகள்ல 'அன்கான்ஷியஸ்'  பற்றி இவர்தான் அதிகமா விளக்கம் கொடுத்திருக்கார். நமக்குத் தேவையில்லாத விஷயங்களை  நம்ம  மனசு  அன்கான்ஷியஸுக்குத் தள்ளிவிட்டுடும். அது, நம்மளோட தீரா ஆசை, கோபம், மறக்கப்பட்ட விஷயங்கள்னு எதுவாவும் இருக்கலாம். நாம எடுக்கிற முடிவுகள் அத்தனையுமே 75 சதவிகிதம் அன்கான்ஷியஸைச் சார்ந்ததாத்தான் இருக்கும். 'லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்'கூட இந்த கான்சப்ட்தான். அன்கான்ஷியஸ் மைண்ட்ல ஒரு ஃப்ரேம் வொர்க் இருக்கு. அதுல நமக்கு வரப்போற பொண்ணோ, பையனோ எப்படி இருக்கணும்னு ஏற்கெனவே செட்டாகியிருக்கும். அதனால, `பார்த்தவுடனே காதல்'கிறது நம்மளோட மைண்ட் செட் சார்ந்த விஷயம்னு சொல்றாங்க உளவியலாளர்கள்.

`சரி, லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் உண்மையானதுதானா'ன்னு தெரிஞ்சுக்க, எந்தெந்த விஷயங்களை  உங்க பாய் ஃப்ரெண்ட்கிட்ட நோட் பண்ணணும்... எந்தெந்த மாதிரியான பசங்களை அவாய்ட் பண்ணணும்னு தெரிஞ்சுக்க இதோ சிலபல டிப்ஸ்...

1. ரெஸ்டாரண்டுக்கு சாப்பிடப் போனா, உங்கள எப்படி ட்ரீட் பண்றங்க?

பொதுவா, ப்ளூ மற்றும் பிங்க் காலர் வேலைகளைச் செய்றதுக்கு நிறைய பொறுமையும் பணிவும் தேவை. `நாங்களும் பொறுமையானவங்கதான்'னு போலித்தனமாகக் காட்டிக்கிறவங்களுக்கு எல்லாம் இந்த வேலை செட்டே ஆகாது. அதனால, கேர்ள் ஃப்ரெண்ட்ஸை ரெஸ்டாரண்டுக்குக் கூட்டிட்டு போய் நல்லா கவனிக்கிற பசங்க, லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்ல உண்மையானவங்களா இருப்பாங்க. ஏன்னா, பொறுமை ரொம்ப அதிகம்ல. இந்த மாதிரி பெர்சனாலிட்டி உள்ள பசங்கள 'தி கன்சூல்'ன்னு உளவியல்ல சொல்வாங்க. இவங்களுக்குப் பொறுமை, நிதானம், அக்கறை, அடுத்தவங்களை எப்பவும் என்டர்டெயின் பண்றது மாதிரியான நல்ல குணங்கள் இருக்கும். `அதுக்கு, நம்ம ஒரு வெயிட்டரையே லவ்பண்ணலாமே!'ன்னு யோசிக்கக் கூடாது. வெயிட்டர் மாதிரி சாப்பாடு விஷயத்துல  நம்மள நல்லா கவனிச்சுக்கிற பசங்களையும் லவ் பண்ணலாம்.

2. அவங்க குடும்பத்தில் உள்ள பெண் உறவினர்களோடு இயல்பாகப் பழகுறவங்களா?

எப்படி அவங்க அம்மா, அக்கா, தங்கச்சிகிட்ட நடந்துகிறாங்கங்கிறது ரொம்ப முக்கியம். தன்னோட முன்னாள் காதலிகளைக்கூட நல்ல முறையில நடத்தும் ஆண்கள், இந்தக் காலத்துல ரொம்பவே குறைவு. இதுக்கும்மேல தன் காதலிகளோட தோழிகள்கிட்ட சகஜமா பழகுற  பையன்,  உங்களோட பாய் ஃப்ரெண்டா இருந்தா தம்ப்ஸ்அப். அந்தப் பொண்ணுங்ககிட்ட பிளெர்ட் பண்ணாம  இருந்தா, டபுள் தம்ப்ஸ்அப். இந்த மாதிரி பசங்க 'தி மீடியேட்டர்' டைப். அமைதியின் சிகரமா இருப்பது, விட்டுக்கொடுத்து போறது, உதவும் மனப்பான்மை... இப்படி அனைத்து நல்ல குணங்களும் சேர்ந்த சிறப்பம்சம்தான் இவங்க. இவங்களால்தான் பெண் உறவினர்கள்கிட்டயும் நல்ல முறையில் பழக முடியும். 

காதல்3. பொழுதுபோக்கை அதிகம் விரும்புறவரா... எப்பவுமே தன்னோட வேலையில் ஒரு பேரார்வம் உள்ளவரா?

லவ்ல விழுந்துட்டா, டே டிரீமிங் அதிகமாவே இருக்கும். இப்படி எப்பவுமே கனவு கண்டுக்கிட்டே இருக்குற பசங்கதான் உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்கிறவங்க. இவங்களுக்கு, ரியல் வாழ்க்கையில எப்படி நடந்துக்கணும்கிற சென்ஸ் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கும். இப்படி லவ்வாங்கீசா யோசிக்கிற பசங்ககிட்ட ஒரு நல்ல கெமிஸ்ட்ரி வேணும்னா இருக்கலாம்;  நடைமுறை அறிவு சுத்தமா இருக்காது. இவங்களோட பெர்சனாலிட்டியைப் பற்றி பெருசா சொல்றதுக்கு எதுவும் இல்லை. இப்போ வெளிவர திரைப்படங்கள்ல வெட்டிப்பசங்களை லவ்பண்றது, ரெளடியைப் பார்த்ததும் ஈர்ப்பு ஏற்படுற மாதிரியெல்லாம் காமிச்சுக் காமிச்சு, புது ட்ரெண்ட் ஏற்படுத்தியிருக்காங்க. இவங்ககிட்ட மாட்டிக்காம, பெண்கள் கவனமா இருக்கிறது ரொம்ப அவசியம்.

4. ஒரே மாதிரியான பெர்சனாலிட்டியா இருந்தா, டாம் அண்ட் ஜெர்ரிதான்!

எதிர் எதிர் துருவம்தான் ஈர்க்கும்னு கேள்விப்பட்டிருப்போம். அது உண்மைதான். ரெண்டு பேரும் ஒரே மாதிரியான ரசனையில இருக்கும்போது சீக்கிரமே சலிப்பு ஏற்படும். வெவ்வேறான உணர்வுகள், ரசனைகள், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகளே இவங்களுக்குக் கிடைக்காமப்போலாம். அப்பப்ப ஊடல் வருவதற்கான வாய்ப்புகளும் கம்மியாத்தான் இருக்கும். 'டிஸ்இல்யூஷன்மென்ட்' என்ற ஒருவிதமான மனநலப் பிரச்னையை இவங்களுக்கிடையே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதாவது, சீக்கிரம் சலிப்பு ஏற்பட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் தொடர்பு இல்லாத மாதிரியே இருப்பாங்க. அதனால் அப்பப்ப செல்லச்சண்டைகள் வந்தா, சந்தோஷப்படுங்க. ரோட்ல வண்டி ஸ்மூத்தா போயிட்டிருந்தா எப்படி... அப்பப்ப சடன் பிரேக் வந்தாதானே நல்லா இருக்கும்.

5. இரண்டு மூன்று மாதங்கள் வரை உங்களை மிகவும் அனுசரித்துப்போகிறார்களா?

love at first sight

இப்படி ரொம்ப அனுசரிச்சுப்போற பசங்ககிட்ட,எப்பவுமே  பிரச்னை இருக்கத்தான் செய்யும். ஒரேடியா பொறுமையா இருக்குற பசங்க, ஒருநாள் பூகம்பம் மாதிரி வெடிக்க, வாய்ப்புகள் அதிகம். லவ்ல முதல் மூணு மாசம் பசங்க செக்ஸுக்கு வற்புறுத்தறாங்களானு பார்க்க சொல்றாங்க. அப்டி இருந்தா 'சடைரியாஸிஸ் பெர்சனாலிட்டி'ன்னு சொல்வாங்க. அதாவது இவங்களுக்கு அதிகமான பொண்ணுங்களோடு செக்ஸ் வெச்சுக்கணும்கிற இலக்கு இருக்கும். அதுக்காக எவ்வளோ பொறுமையா இருக்க முடியுமோ, அவ்வளோ பொறுமையா இருப்பாங்க. 

இந்த மாதிரியான குணாதிசயங்கள் இருக்குற பசங்கதான் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டோட குட்  அண்ட் பேட் ராங்கிங்ல இருக்கிறவங்க. நாம முன்னாடியே பார்த்த மாதிரி, நம்மளோட உணர்வுகளுக்கு எப்போதுமே  அன்கான்ஷியஸோடு தொடர்பு இருக்கும். அதனால் நம்ம மனசு எப்பவுமே ரைட் சாய்ஸைத்தான் தேர்ந்தெடுக்கும். ஸோ, ரைட் சாய்ஸுக்கு வெயிட்பண்ணுங்க. அவசரப்பட்டு மாட்டிக்காதீங்க காதல் கண்மணிகளே!

 

-சுஜிதா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement