Published:Updated:

“அந்த நல்ல உள்ளங்களுக்காக எங்கள் துவா!”

ம.கா.செந்தில்குமார், படம்: கே.ராஜசேகரன்

டந்த 21.8.2013 தேதியிட்ட விகடனில் 'சிறுகச் சிறுக செத்துப் பிழைத்தோம் - ஒரு குடும்பத்தின் கண்ணீர்  கதை’ என்ற தலைப்பில் அப்துல் மஜீத் - ரெஜினா குடும்பத்தினரின் வேதனையை எழுதியிருந்தோம். வேலூர் மாவட்டம் அகரஞ்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்தத் தம்பதியின் மூன்று மகன்களும் 'அல்போர்ட் சிண்ட்ரோம்’ என்ற மரபுவழி சிறுநீரகக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அந்த இதழ் வந்த நாளில் இருந்து உள்ளூர் வாசகர்கள் மட்டுமின்றி

“அந்த நல்ல உள்ளங்களுக்காக எங்கள் துவா!”

அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவு, குவைத், சவுதி என வெளிநாடுகளில் இருந்தும் அப்துல் மஜீத் குடும்பத்தினருக்கு உதவிகள் குவிந்திருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''நேரடியா 'வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்’ க்கு (நிதி உதவி செய்தவர்களின் விவரங்களை விகடன்.காம் இணையதளத்தில் காணலாம்) வந்தது, என் அக்கவுன்ட்டுக்கு நேரடியா அனுப்பினதுனு மொத்தம் பத்து லட்ச ரூபாய்க்கு மேல வந்திருக்கு. இந்தப் பணம் வர்றதுக்கு முன்னாடியே, எங்களை கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கிட்ட சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கும், அதன் டீன் கனகசபை சார், கோபாலகிருஷ்ணன் டாக்டருக்கும் நன்றி. அவங்க இல்லைன்னா, எங்க குடும்பம் இன்னைக்கு இல்லை. எங்க கஷ்டத்துக்குத் தோள் கொடுத்த எல்லாரும் நல்லா இருக்கணும்னு எங்க குடும்பமே அல்லாகிட்ட துவா கேட்டுக்கிறோம்!'' - நெகிழ்கிறார் அப்துல் மஜீத்.

நிதி உதவி செய்தவர்களின் விவரங்கள்

“அந்த நல்ல உள்ளங்களுக்காக எங்கள் துவா!”