Published:Updated:

டாக்டர்கள் பாடினார்கள்!

வீயெஸ்வி, படம்: பா.கார்த்திக்

##~##

லேடி டாக்டர்கள் இருவர், சென்ற வாரம் மியூசிக் அகாடமி மேடையில் இணைந்து பாடினார்கள்! டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன், டாக்டர் சௌம்யா. முன்னவருக்கு கௌரவப் பட்டம்; பின்னவர், ஆராய்ச்சி செய்து டாக்டர் ஆனவர். நிகழ்ச்சி ஏற்பாடு: எஸ்.எஸ். இன்டர்நேஷனல் நடத்திய நவோஸ்தவம்.

இருவரும் குருவருளும் திருவருளும் கேட்டு ஆபோகியில் வேண்டினார்கள். 'பாட வேண்டுமே, இசை பாட வேண்டுமே...’ என்று ஹம்சநாதத்தில் கூக்குரல் கொடுத்தார்கள். 'என்ன சொல்லி அழைத்தால் நீ வருவாயோ...’ என்று கானடாவில் கெஞ்சிக் கேட்டார்கள். சண்முகப்ரியாவின் துணையுடன் பார்வதி நாயகனை சரண் அடைந்தார்கள். பின்னர் 'தாயே யாசோதா...’ என்று தோடியில் ஜாலம் புரிந்தார்கள். ஆக, அன்றைய மாலை எல்லாமே தேன் மதுரத் தமிழ்ப் பாடல்கள். (கர்னாடக கச்சேரி மேடையில் தமிழில் பாடுவது இல்லை என்ற புலம்பலுக்கு இப்போதெல்லாம் அர்த்தமே இல்லை. அநேகமாக எல்லாக் கச்சேரிகளிலுமே தமிழில் இசைப்பதைக் கேட்க முடிகிறது.)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சுருதி விஷயத்தில் பிரச்னை இல்லை. இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே சுருதிதான். எனவே, ஈஸியாக இணைய முடிந்தது. சண்முகப்ரியாவும் தோடியும் தேன் சிந்தும் ராகங்கள். சௌம்யாவின் இனிமை கலந்த குழைவான குரலிலும், நித்யஸ்ரீயின் கம்பீர சங்கதிகளிலும் இரண்டு ராகங்களுமே தீபாவளி ஸ்பெஷல் மாதிரியாக புதுப் பொலிவுடன் மிளிர்ந்தன!

டாக்டர்கள் பாடினார்கள்!

ரிலே ரேஸ் மாதிரி இரு ராகங்களையும் இருவரும் மாறிமாறி வளர்த்துச் சென்று, பாடல்களில் ஒன்று சேர்ந்து, ஸ்வரங்களின்போது மறுபடியும் பிரிந்து சென்று மீண்டும் ரிலே ரேஸ்! சண்முகப்ரியா ஹீட்ஸ் என்றால், தோடியில் ஃபைனல் ஓட்டம்!

அதே சமயம் கொஞ்சம் கல்யாணக் கச்சேரி மாதிரியும் அன்றைய மாலைப்பொழுது தோன்றியது. ஒரு பக்கம் நித்யஸ்ரீயும் சௌம்யாவும் இட - வலம் தலை சாய்த்து எதையோ பேச, இன்னொரு பக்கம் மிருதங்கமும் கடமும் தனியாக ஏதோ பஞ்சாயத்து செய்துகொண்டிருந்தார்கள்!