Published:Updated:

ராயலசீமா ராமாயி மிரட்டும்...

வீயெஸ்வி

##~##

பாத்திரம் புரிந்து பிச்சையிட்டு இருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரா. நாடக ஆசிரியர் வெங்கட் கற்பனையில் கண்ட புதிரான ஒரு கதாபாத்திரத்துக்கு உயிரூட்ட ஐஸ்வர்யாவைத் (நடிகை லட்சுமியின் மகள்) தேர்வுசெய்து, நாடக மேடைக்கு அறிமுகம்செய்துள்ள மகேந்திராவுக்கு 10 மார்க்!

யு.ஏ.ஏ. குழுவின் 'இரண்டாம் ரகசியம்’ நாடகத்தில் மேடைக்கு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் வரவு ஐஸ்வர்யாவுக்கு, ஒரு பூங்கொத்து.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆந்திராவில் 'ஏதோ ஒக்க ஊரு’ ரயில்வே ஸ்டேஷனின் வெயிட்டிங் ரூம்தான் கதைக் களம். அறையின் ஜன்னல் வழியே தெரியும் கனகதுர்கா கோயில். தாமதமாக வந்து கொண்டிருக்கும் ஹவுரா மெயில், காத்திருக்கும் மூன்று பயணிகள், ஒரு டாக்டர், ஹோம்மேக்கர் ஒருவர் மற்றும் ஓர் அரசியல்வாதி, பேச்சுத்துணைக்கு அச்சுப்பிச்சு ஸ்டேஷன் மாஸ்டர். 'இந்த ஸ்டேஷன்ல 'ராயலசீமா ராமாயி’ என்கிற பேய் நடமாடிக்கிட்டு இருக்கு’ என்று ஸ்டேஷன் மாஸ்டர் கேஷ§வலாக ஒரு திரியைப் பற்றவைக்க, வெங்கட்டின் கதை, ஆயிரம் வாலா டப்பாஸாக வெடித்து நிறைய சிரிக்கவும், கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கிறது.

புதிர் லேடி ஐஸ்வர்யா, டாக்டரின் பழைய கதையைக் (ஆஸ்பத்திரி தில்லுமுல்லு) கிளறிவிட, டாக்டர் திருட்டு முழி! அதேபோல், அந்தப் பெண் குடித்துவிட்டிருந்த தன் கணவனை, கார் ஓட்ட வற்புறுத்தி அவன் சாவுக்குக் காரணமாகி விட்டதை ஐஸ்வர்யா புட்டுவைக்க, அந்தப் பெண் திருதிரு! அதே வழியில், அரசியல்வாதியின் கடந்தகால ஊழல் வெளிப்பட, அ.வா., அம்பேல்!

ராயலசீமா ராமாயி மிரட்டும்...

மூன்று ஃப்ளாஷ்பேக் சம்பவங்களில் அந்தப் பெண் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு சவசவ! ஆஸ்பத்திரியும் சரி, பெண்ணின் வீடும் சரி... காட்சி அமைப்பு சற்றே அழுக்கு! நீலப்படுதாவுடன் நிறுத்திக்கொண்டுவிடாமல், இந்த விஷயத்தில் மகேந்திரா இன்னும் கொஞ்சம் மெனக்கெடலாம்.

அரசியல்வாதியாக ஒய்.ஜி.எம். கூர்மையான வசனங்களின் துணையுடன், நிகழ்கால அரசியலையும் அரசியல்வாதிகளையும் - மன்மோகன்சிங் உட்பட - சகட்டுமேனிக்கு கலாய்க்கும்போது அரங்கில் சிரிப்பு அனல். ஜோக்குகளில் லேசாக பார்டர் தாண்டவும் செய்கிறார். இல்லாவிட்டால், அவருக்குத் தூக்கம் வராதே!

ஐஸ்வர்யா யார்? பேயா, பிசாசா அல்லது வேறு ஏதாகிலுமா?

சஸ்பென்ஸ் உடைக்க 'மனசாட்சி’ இடம் தரவில்லை!