''சமீபத்தில் உங்களை நெகிழவைத்த செய்தி?''

''அமெரிக்கரான மார்க் ஸ்ட்ராங்மனின் தங்கை செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலில் இறந்துவிட்டார். இதனால் 'அரேபியர்கள் எல்லாம் தீவிரவாதிகள்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ஸ்ட்ராங்மன். தன் வீட்டின் அருகில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரை நடத்துபவர் ஓர் அரேபியர் என்று நினைத்தவர், துப்பாக்கியால் அவரைச் சரமாரியாகச் சுட்டுவிட்டார். ஆனால், அந்த ஸ்டோரை நடத்தியவர் ராய்ஸ் பூயியான் என்ற வங்காள தேசத்தைச் சேர்ந்த முஸ்லிம். அவர் துப்பாக்கிச் சூட்டில் தப்பிவிட்டார். கடையின் பணியாளர் களான வாசுதேவ் பட்டேல் என்ற இந்தியரும் வாக்கர்ஹாசன் என்ற பாகிஸ்தான்காரரும் இறந்துவிட்டார்கள். காவல் துறையால் கைது செய்யப்பட்ட மார்க் ஸ்ட்ராங்மனுக்கு மரண தண்டனை விதித்தது நீதிமன்றம். ஆனால், 'மன்னிப்பதுதான் எங்கள் மதத்தின் தத்துவம்’ என்று அந்த ஸ்டோரை நடத்தி வந்த பூயியான், ஸ்ட்ராங்மனுக்காக நீதிமன்றத்தில் வாதாடினார். நீதிமன்றம் அந்த வாதத்தை ஏற்க மறுத்தது. விஷ ஊசி ஏற்றப்பட்டு ஸ்ட்ராங்மனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. மார்க் ஸ்ட்ராங்மனின் மரணத்தைத் தடுக்க முடியாவிட்டாலும், பூயியானின் மனிதநேயத்தைப் போற்றலாமே!''

- ஸ்ரீதேவி, மதுரை.

'' 'கூடா நட்பு கேடு தரும்’ - தி.மு.க-வுக்கு. காங்கிரஸுக்கு?''

''பகையாளி குடியை உறவாடிக் கெடு!''

- ஆர்.ஆர்.உமா, திருநெல்வேலி.

''பாளையங்கோட்டை...?''

''தத்துவ அறிஞர் ஹெகலின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன. 'வரலாற்றில் எல்லாச் சம்பவங்களும் இரண்டு முறை நடக்கின்றன. முதல் முறை சீரியஸாகவும் இரண்டாம் முறை படு காமெடியாகவும்!’ என்றார் ஹெகல்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கருணாநிதி பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதை அண்ணா நேரடியாகச் சென்று பார்த்தார். 'என் தம்பி கருணாநிதி இருக்கும் பாளையங்கோட்டை சிறைச்சாலைதான் என் புனித ஸ்தலம்!’ என்று அவர் சொன்னதை இப்போதும் கருணாநிதி பெருமையாகச் சொல்லிக் கொள்வது உண்டு. பல்வேறு மோசடி வழக்குகளில் அதே பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பொட்டு சுரேஷ் உட்பட தன் நண்பர்களைப் பார்க்க இப்போது அழகிரியும் போய் வந்திருக்கிறார். இப்போதும் அது 'புனித ஸ்தலமா’ இல்லையா என்பதைத் தி.மு.க-வினரே முடிவு செய்துகொள்ளட்டும். ஆனால், இதைச் சாக்காகவைத்து அழகிரிக்கு 'வாழும் அண்ணா!’ என்று யாரும் போஸ்டர் அடிக்காமல் இருந்தால் சரி.''

- மலர்விழி, சேலம்.