Published:Updated:

90 வயதில் ஆடுகளை விற்று மாமியாருக்கு கழிவறை கட்டிக் கொடுத்த மருமகள்..!

குருபிரசாத்
90 வயதில் ஆடுகளை விற்று மாமியாருக்கு கழிவறை கட்டிக் கொடுத்த மருமகள்..!
90 வயதில் ஆடுகளை விற்று மாமியாருக்கு கழிவறை கட்டிக் கொடுத்த மருமகள்..!

சமூகவலைதளங்களில் அன்னையர் தினம் கொண்டாடி வரும் நிலையில், 90 வயது மூதாட்டி ஒருவர் தனது 120 வயது மாமியாருக்கு கழிவறை ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். 


உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் சந்தனா. 90 வயதான இவருக்கு, 120 வயதில் மாமியார் ஒருவர் உள்ளார். அவர்களது வீட்டில் கழிவறை இல்லை. இதனால், கடந்த மாதங்களுக்கு முன் காலைக் கடனை கழிப்பதற்காக, அவரது  மாமியார் வெளியே சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவரது கால் உடைந்துள்ளது.


இதையடுத்து, தனது மாமியாருக்கு கழிவறை ஒன்றை கட்டிக் கொடுக்க சந்தனா திட்டமிட்டுள்ளார். மத்திய அரசின் கழிவறை திட்டத்தின் மூலம், அவர் கழிவறை கட்ட முயற்சி செய்தார். ஆனால், அவரது முயற்சி வீணானது. அரசு அதிகாரிகள், அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.


இதைத்தொடர்ந்து தனது சொந்த காசில் கழிவறை கட்ட அவர் முயற்சி செய்துள்ளார். இதற்காக, அவர்கள் வளர்த்து வந்த ஐந்து ஆடுகளை விற்று, கழிவறை கட்டியுள்ளார். அதை, அன்னையர் தினமான இன்று, தனது மாமியாருக்கு வழங்கியுள்ளார். தனது மகனின் உதவியுடன் சந்தனா கழிவறை கட்டியுள்ளார். இதையடுத்து, சந்தனாவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


குறிப்பாக, கிராமப்புறங்களில் கழிவறை கட்டும் மத்திய அரசின் திட்டத்துக்கு, சந்தனாவை தூதராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அரசு உதவியுடன் கழிவறை கட்ட சந்தனா முயற்சித்தபோது, அதிகாரிகள் ஒத்துழைக்காதது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நன்றி ANI