Published:Updated:

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது!

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது!
News
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது!

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது!

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது!

சென்னையில் இருந்து ஈரோடு வரை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. அரக்கோணம் ரயில் நிலையத்தில் நுழையும்போது ரயில் எஞ்சின் உட்பட 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. குறைந்த வேகத்தில் சென்றபோது ரயில் தடம் புரண்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ரயில் தடம் புரண்டதற்கு ரயில் தண்டவாளத்தில் உள்ள இடைவெளி காரணமாக கூறப்படுகிறது. ரயில்வே போலீஸார் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். 

பழுதை சீர்செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே அதிகாரிகளின் மேற்பார்வையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் சந்திப்பில் குறைவான வேகத்தில் நுழையும்போது இந்த விபத்து ஏற்பட்டதால், ரயில் ஓட்டுநர் பிரேக் பிடித்ததும் ரயில் நின்றுள்ளது. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும், இந்த ரயிலில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பயணம் செய்துள்ளார். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பயணிகளும் காயமின்றி தப்பினர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz