Published:Updated:

ரெய்டுக்குக் காரணம் ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம்? 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரெய்டுக்குக் காரணம் ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம்? 
ரெய்டுக்குக் காரணம் ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம்? 

ரெய்டுக்குக் காரணம் ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம்? 

முன்ளாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக இந்தச் சோதனை நடத்தப்பட்டுவருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ரெய்டுக்குக் காரணம் ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம்? 


 

2008-ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டுக்கான அனுமதி பெற்றுத்தந்தது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சில நாள்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்தே இந்த ரெய்டு நடவடிக்கையை சிபிஐ மேற்கொண்டுள்ளது. 

சிபிஐ அதிகாரிகள் குழு, ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் காலையில் இருந்து சோதனை நடத்திவருகின்றது. சென்னை மட்டுமன்றி, டெல்லி, நொய்டாவில் உள்ள அவர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என மொத்தம் 14 இடங்களில் சோதனை நடந்துவருகிறது. இந்த ஐ.என்.எக்ஸ் நிறுவனத்தின் இந்திராணி முகர்ஜி, தன்னுடைய மகளையே கொன்ற வழக்கில் தற்போது சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது பல்வேறு ஊழல், முறைகேடு தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராஜஸ்தானில், ஹிகித்சா ஹெல்த் கேர் லிமிடெட் நிறுவனம், ஆம்புலன்ஸ்களை முறைகேடாக இயக்கியது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றன. 

கிட்டத்தட்ட 45 கோடி ரூபாய் முறைகேடு செய்திருப்பதாக, கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, ஏர்செல்- மேக்சிஸ், வாசன் ஹெல்த்கேர் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. வாசன் ஹெல்த்கேர் மூலமாக நடந்த கறுப்புப் பணப் பரிவர்த்தனையில் கார்த்தி சிதம்பரத்துக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த வழக்குகளில் ஆஜராகி, விளக்கம் அளிக்கும்படி சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவுகள் தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பிவந்தன. ஆனால் கார்த்தி சிதம்பரம், 'அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ஆஜராகவில்லை' என்று குற்றச்சாட்டு கிளம்பியது. இது, 'வதந்தி' என்று ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். 

கடந்த ஏப்ரல் மாதம் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், 'விசாரணை தொடர்பாக எந்த நோட்டீஸும் கார்த்திக்கு வரவில்லை. அப்படி வந்தால், நேரில் ஆஜராகித் தேவையான விளக்கம் அளிக்கக் கார்த்தி சிதம்பரம் தயாராக இருக்கிறார். நோட்டீஸ் அனுப்பிவிட்டோம். ஆனால், கார்த்தி ஆஜராகாமல் இருக்கிறார் என்று அமலாக்கப்பிரிவுதான் தேவையில்லாமல் தவறான தகவலை பரப்பிவருகிறது. நோட்டீஸ் வந்தால் உரிய பதில் அளிப்போம்' என்றார். மேலும், 'கார்த்தி சிதம்பரத்தை குறிவைப்பதன்மூலம் என்னைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்று மத்திய அரசு கருதுகிறது. இதன்மூலம் என்னுடைய எழுத்தையோ பேச்சையோ நிறுத்திவிட முடியாது' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு