'கைகள் இல்லையென்றால் என்ன..? முடியாதது எதுவும் இல்லை’: அசரவைக்கும் புதுச்சேரி இளைஞர்!

'இரண்டு கைகளும் ஒத்துழைக்கவில்லை என்றால் என்ன, தன்னம்பிக்கை நிறைந்தே உள்ளது' என நிரூபித்திருக்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் முத்துக்குமார பாண்டியன்.

மாற்றுத்திறனாளி வாலிபர்


புதுச்சேரியைச் சேர்ந்த முத்துக்குமார பாண்டியனுக்கு, பிறந்ததிலிருந்தே கைகளும்  கால்களும் சரியான முறையில் செயல்படவில்லை. ஆனாலும், தன் வேலைகளையாவது தானே செய்ய வேண்டுமென விரும்பும் நம்பிக்கை மனிதர்.

 

 

 


தன்னிடம் குறை உள்ளது என்பதை ஒருபோதும் வெளிக்காட்டாமல் இருக்கும் பாண்டியன், சிறுவயதிலிருந்தே தன் வேலைகளைத் தானே செய்துகொள்கிறார். இது மட்டுமல்லாமல், உதவி என யார் கேட்டாலும், அவர்களின் தேவையை உடனடியாகப் பூர்த்திசெய்து கொடுப்பார். தனது சொந்த முயற்சியினாலேயே பலருக்கு அரசின் முதியோர் உதவித்தொகை, விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஊக்கத்தொகை, கல்விக்கடன், உதவித்தொகை என 4,000-த்துக்கும் மேற்பட்டோருக்கு உதவி புரிந்துள்ளார் முத்துக்குமார பாண்டியன்.


யாரையும் எதற்கும் எதிர்பார்க்காமல், தன் வேலைகள் போக மற்றவர்களுக்காகவும் உழைக்கும் தன்னம்பிக்கை நிறைந்த வலிமையான இளைஞர், முத்துக்குமார பாண்டியன், தன் சாதனைப் பயணத்தைத் தொடர வாழ்த்துவோம்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!