மீம் க்ரியட்டர்களே கொஞ்சம் இந்த ஏரியாவையும் கவனிங்கப்பா..! | Meme creators should consider this things

வெளியிடப்பட்ட நேரம்: 21:21 (17/05/2017)

கடைசி தொடர்பு:19:46 (17/05/2017)

மீம் க்ரியட்டர்களே கொஞ்சம் இந்த ஏரியாவையும் கவனிங்கப்பா..!

அசுர வேகத்துல போய்க்கிட்டு இருக்குற உலகத்துல, அடிக்கடி ஸ்பீட் பிரேக்கர்ல தடுக்கி விழுறது தமிழ்நாடுதான். கடந்த ரெண்டு நாளா ஸ்ட்ரைக் காரணமா குதூகலமா இருந்த பிரைவேட் பஸ், கால் டாக்ஸிகளுக்கு ஒரு தற்காலிக எண்ட் கார்ட் போட்டாச்சு. அப்பாடா... இனி பஸ் ஓடும்னு ஒருபக்கம் நெனச்சாலும், இந்த ரெண்டு நாள் அவதி ஒரு 'கபீம்குபாம்' பீலிங்குதான். ஒருபக்கம் பஸ் இல்ல... காசு எடுக்க ஏ.டி.எம் இல்ல... பத்தாததுக்கு கேர்ள்பிரண்ட்ஸ் தொல்லை என்று அலறும் இளைஞர்களின் ஆவேசகுரல் தான் மீம்ஸ் உலகின் புதிய ட்ரெண்டிங். ஆனா இந்தக் களேபரத்துல சில முக்கியமான விஷயங்களை மறந்துட்டீங்க மீம் மக்களே! அதை ஞாபகப்படுத்துறதுதான் எங்க நோக்கம்.

டூயட் பாட்டுக்கு ரீமேக்கு:

மீம்

வீட்ல பிக் அப்பு... ஆபிஸ்ல ட்ராப்பு... தலை தெறிக்க எஸ்கேப்பு... இப்படித்தான் கேர்ள் பிரண்ட்ஸ்க்காக பல பசங்க கஷ்டப்பட்டுகிட்டு இருந்தாங்க. 'பஸ் வேற ஓடல... உன் பேபி நடுரோட்ல...சீக்கிரம் வந்தா தேவலல...'  அப்படினு மெசேஜை பாத்த உடனே சும்மா சிட்டாப் பறக்குறாங்க பசங்க. இவங்களுக்காக ரோடு வேற காலியா இருக்கு. இந்த ரோட்ல அப்டியே 360 டிகிரி கேமராவைப் பொருத்தி வச்சா... சில பல டூயட் பாட்டோட ட்ரோல் வீடியோ ரெடியாகிடும். இதை வச்சு மீம்ஸ் போட்டீங்கன்னா குபீர் சிரிப்பு கேரன்டி.   

பார்க்கிங்கை தேடி: 

பார்க்கிங்

இந்த கார் என்னா விலை தெரியுமா, இதை மெயின்டைன் பண்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமானு ஹைஃபை காரை வச்சுக்கிட்டு படம் போடுற பிக் பாஸ் எல்லாருக்கும் பஸ் ஓடுனா என்ன... ஓடலைன்னா என்ன...? ரோடு காலியா இருந்தா ஜாலியா போகலாங்கிறதுதான் அவங்களோட எண்ணம். ஆனா, அங்கதான் இருக்கு செக். ரோடு வேணும்னா காலியா இருக்கலாம், ஆனா பார்க்கிங் எப்பவும் போல ஹவுஸ் ஃபுல் தானே பாஸ். இப்படி ஓரே வெறிச்சோடினாலும் பார்க்கிங்கை தேடி ஒரு பயணம் பண்ற அண்ணன்களோட விடாமுயற்சியைப் பாராட்டி ஸ்பெஷலா மீம் ஆல்பமே போடலாமே!

ஓலா பஸ்: 

பஸ்

சும்மா டாலர் ரேட் மாதிரி எகிறிக்கிட்டே இருக்கு கால் டாக்ஸி கட்டணம். இவங்களுக்கு ஏகபோகமா கஸ்டமர்ஸ் வந்துகிட்டே இருக்குறதுனால மின்னல் வேகத்துல வண்டிய ஓட்டுறாங்க. சென்னையில வெள்ளம் வந்தப்போ 'வந்தாச்சு ஓலா போட்'ன்னு சொன்னீங்க... இப்போ அடிச்சது யோகம்னு 'வரப்போகுது ஓலா பஸ்'ன்னு சொல்றீங்களே, பிரமாதம்! கேப்புல கிடா இல்ல, டைனோசரே வெட்டுற நீங்க 'அதுக்கும் மேல' ரகம். தயவு செஞ்சு டிக்கெட்டையும் டிஜிட்டல்ல குடுத்துறாதீங்க ப்ளீஸ். 

நாங்க போர்டுதான் மாத்துவோம்... வண்டிய இல்ல:

பஸ்

காலேஜ் பஸ்ஸுக்கு போர்டு போட்டு பிரைவேட் பஸ்ஸா மாத்துனீங்க. ஆனா அதுல இம்புட்டு கூட்டத்தையா ஏத்துவீங்க? சட்டனு ஸ்டாப்புல கூட இறங்க முடியாது போல. இப்படி டாப்புல உட்கார்ந்து சவாரி செய்றதை எல்லாம் பழைய படத்துல காமெடியா தான் பாத்துருக்கோம். ஆனா, கண் முன்னால டிராஜிடியா காமிச்சதுக்காகவே மீம்ஸ் போடலாமே சாமி!

 

- சுஜிதா 


டிரெண்டிங் @ விகடன்