வெளியிடப்பட்ட நேரம்: 09:51 (18/05/2017)

கடைசி தொடர்பு:10:17 (18/05/2017)

நயன்தாரா முதல் அனுஷ்கா வரை... யார் யாரிடம் என்ன கார்? அதில் என்ன ஸ்பெஷல்?

‘ஓர் இடத்துக்குப் போக, வர எவ்வளவு யூஸ்ஃபுல்லா இருக்கு’ என்பதைத் தாண்டி, கார் வைத்திருப்பது என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகிவிட்டது. நீங்கள் பயன்படுத்தும் காரை வைத்தே உங்கள் செல்வாக்கைத் தெரிந்து கொள்ளலாம். காமன் மேன்களுக்கே இப்படி என்றால், சினிமா வுமன்களுக்குக் கார் என்பது கெத்து. சினிமா பிரபலங்கள் கார் வைத்திருப்பதிலும் ராசி பார்ப்பார்கள். பிஎம்டபிள்யூ, ஆடி கார்களுக்குத்தான் சினிமாவில் மவுசு. பாலா, மாதவன், சிவக்குமார் என்று பென்ஸ் கார் வைத்திருக்கும் சினிமா பிரபலங்கள் ரொம்ப சொற்பம். நடிகர்கள் ஓகே! நடிகைகள் எப்படி? கோலிவுட் முதல் பாலிவுட் வரை, நடிகைகளின் கார் கலெக்ஷன் இது.

அனுஷ்கா

குந்தலதேசத்து யுவராணி ‘தேவசேனா’, எளிமைக்கு எடுத்துக்காட்டு. கர்நாடகத்தைச் சேர்ந்த அனுஷ்கா ஷெட்டி, ஆரம்பத்தில் காரே அனுஷ்காஇல்லாமல்தான் இருந்தாராம். யோகா ஆசிரியராக இருந்தபோது, வாடகை கார்களில்தான் பயணிப்பாராம். தயாரிப்புத் தரப்பில் வரும் கார்களில்தான் ஷூட்டிங்கே போவார். ‘எவ்வளவு பெரிய நடிகை; சொந்தமா கார் இல்லேனா எப்படி?’ என்ற குடும்பத்தினரின் ஆதங்கத்தின்படி, முதன் முதலாக 1.5 கோடி ரூபாய்க்கு ஜாகுவார் XJ மாடல் காரை வாங்கினார். இதை செலெக்ட் செய்தது அனுஷ்காவின் அண்ணன். அதற்கப்புறம் விழாக்களுக்குச் செல்வதற்கு ஒரு பிஎம்டபிள்யூ X5 காரும் பயன்படுத்தி வருகிறார். இந்தக் காரின் விலை சுமார் 70 லட்சம். ஷூட்டிங்குக்கு இப்போது ஜாகுவார்தான் அனுஷ்காவின் சாய்ஸ்.

நயன்தாரா

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவுக்கு, ரொம்பப் பிடித்த விஷயம் கார். அதிலும் பிஎம்டபிள்யூதான் அவரின் ஃபேவரைட். X3, X5, 7 சீரிஸ் என்று பிஎம்டபிள்யூ கார்கள்தான் நயனின் கராஜில் வரிசை கட்டி நிற்கின்றன. கார் பயணங்கள் என்றால் நயனுக்கு உயிர். சென்னையிலிருந்து கேரளாவுக்கு பிஎம்டபிள்யூ X3 காரை தானாகவே ஓட்டிச் சென்றுவிடுவாராம். இப்போது ‘நீயாலாம் கார் ஓட்டக் கூடாது’ என்று பாசமானவர்களின் அன்புக் கட்டளைக்குப் பிறகு, டிரைவர் வைத்துப் பயணிக்க ஆரம்பித்து விட்டார். நயனுக்கு கறுப்பு என்றால் இஷ்டம். அதனால், நயனின் பிஎம்டபிள்யூ கார்கள் எல்லாமே கறுப்புக் கலரில் ஜொலிக்கின்றன.

ஸ்ருதிஹாசன்

 

கார்


அப்பா மாதிரியே ‘ரஃப் அண்ட் டைப்’ கார்கள்தான் ஸ்ருதியின் ஃபேவரைட். தடாலடி காரான லேண்ட் க்ரூஸர் பயன்படுத்தி வந்த கமல்ஹாசன், இப்போதுதான் மென்மையான ஆடி A8-க்கு மாறியிருக்கிறார். ஸ்ருதிக்கு எப்போதுமே எஸ்யூவி கார்கள் மீதுதான் கண். இந்தியாவில் சாஃப்ட் ரோடராகவும் ஆஃப் ரோடராகவும் பட்டையைக் கிளப்பும் கார், ரேஞ்ச்ரோவர் மாடல்தான். இந்த எஸ்யூவியின் விலை 1.5 கோடி. இதை ஹைவேஸுக்கும் கரடுமுரடு சாலைகளுக்கும் ஏற்றபடி ஏர் சஸ்பென்ஷனை மாற்றி, காரின் உயரத்தை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம் என்பது ஸ்பெஷல். வீல் பேஸ் அதிகம் கொண்ட இந்த மாடலை விரட்டுவதில் ஸ்ருதிக்கு அலாதி பிரியம்.

த்ரிஷா

தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி 18 வருடங்கள் ஆனாலும், இன்னும் டீன் ஏஜைத் தாண்டாத த்ரிஷாவும் பிஎம்டபிள்யூ ரசிகைதான். ஆரம்பத்தில் இனோவா மற்றும் டொயோட்டா கேம்ரி கார்கள் பயன்படுத்தி வந்த த்ரிஷா, நயன்தாராவைப் பார்த்துத்தான் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் வாங்கியதாகச் சொல்கிறார்கள். ‘கேம்ரி கார் வெறும் 3 கி.மீ கூட மைலேஜ் தரமாட்டேங்குது; அதான் பிஎம்டபிள்யூவுக்கு மாறினேன்’ என்று ஒரு தடவை சொன்னார் த்ரிஷா. இது தவிர இன்னும் 2 கார்கள் த்ரிஷா வசம் உள்ளன. 

சமந்தா

 

சமந்தா


சமந்தாவும் சாட்சாத் பிஎம்டபிள்யூ ஃபேன்தான். தெலுங்கிலும் தமிழிலும் கலந்து கட்டி அடிக்கும் சமந்தாவிடம் இருப்பது பிஎம்டபிள்யூ X5 கார். எஸ்யூவியான இதன் விலை கிட்டத்தட்ட 80 லட்சம் ரூபாய். கறுப்புதான் சமந்தாவுக்கும் ஃபேவரைட். ‘சமந்தாவும் நயனுக்குப் போட்டியாக பிஎம்டபிள்யூ கார் வாங்கினார்’ என்று ஒரு செய்தி வர, ‘நயன் வைத்திருப்பது 5 சீரிஸ்; என்னிடம் இருப்பது X5' என்று பதிலடி கொடுத்தார். இதற்காகவே 70 லட்ச ரூபாய்க்கு ஜாகுவார் XF கார் ஒன்று வாங்கி தனது கராஜில் பார்க் செய்தார் சமந்தா. இப்போது லேட்டஸ்ட்டாக தன் கணவருக்கு பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரும், MV அகுஸ்டா பைக்கும் பரிசளித்து ‘சமத்து மனைவியாக’ கணவரைக் காதலித்து வருகிறார் சமந்தா.

அசின்

 

அசின்

மைக்ரோமேக்ஸ் அதிபரான அசினுக்குப் பிடித்தது ஆடி கார்கள். எஸ்யூவி ரகம்தான் அசினின் ஃபேவரைட். MH பதிவு எண் கொண்ட கறுப்பு நிற ஆடி Q7 எஸ்யூவி காரில்தான் அசினின் மும்பைப் பயணம் முழுதும். ஆனால், அசினின் கணவர் ராகுல் ஷர்மா செடான் பிரியர்.

காஜல் அகர்வால்

கார் கலெக்ஷனில் எல்லாம் காஜலுக்கு இன்ட்ரஸ்ட் இல்லை. ஆரம்பத்தில் அண்ணனின் காரில்தான் முழுப் பயணமும். இப்போது காஜலிடம் ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ என கறுப்பு நிற பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் மட்டும்தான் இருக்கிறது. இதன் விலை கிட்டத்தட்ட 80 லட்ச ரூபாய்.

ஹன்ஸிகா மோத்வானி

 

ஹன்சிகா

இந்தப் புதுவருடத் துவக்கத்தில்தான் ஹன்ஸிகா, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் வாங்கினார். நேவி புளூ கலரில் உள்ள இந்த பிஎம்டபிள்யூ காரை டெலிவரி எடுத்த முதல் நாளே தன் குடும்பத்தினரை ஏற்றிக்கொண்டு ஜாலி ரைடு போய்விட்டு வந்து ட்விட்டரில் பதிவிட்டதற்கு எக்கச்சக்க ரீ-ட்வீட்டுகளும் லைக்குகளும் குவிந்து விட்டன. ஹன்ஸிகாவின் ராசி எண் 9. அவரின் பிறந்த தேதி 9; புதிதாக அவர் வாங்கிய ஃப்ளாட்டின் கதவு எண் 9. இப்போது தனது காருக்கும் 9-லேயே ஃபேன்ஸி நம்பர் கிடைத்ததில் ஹன்ஸிகா ஹேப்பி அண்ணாச்சிகளே! பிஎம்டபிள்யூ 9 சீரிஸ் வந்தா வாங்கிப் போடுங்க அம்மணி!

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியாவுக்கு கார் எந்தளவு பிடிக்கும் என்றால், கார் கம்பெனிகள் அழைப்பு விடுத்தால் முதல் ஆளாகக் கலந்துகொள்ளும் அளவுக்கு கார்கள் மேல் லவ். ஆடி Q3 காரை இந்தியாவில் அன்வெய்ல் பண்ணியதே ஆண்ட்ரியாதான். வின்டேஜ் கார் ராலி நடந்தாலும் கொடியசைத்துத் துவக்கி வைக்க ஆஜராவது ஆண்ட்ரியாவின் ஹாபி. இந்தப் ‘பச்சைக்கிளி முத்துச்சரத்துக்குப்’ பிடித்தது பிஎம்டபிள்யூ. 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ X1 காரில் இப்போது வலம் வருகிறார் ஆண்ட்ரியா. 

ரித்திகா சிங்

ரித்திகா சிங்கிடம் இப்போதைக்குக் கார் இல்லை. தயாரிப்பு தரப்பு வாடகை காரில்தான் ரித்திகாவின் பயணம். சொந்த ஊருக்குப் பயணம் என்றால் விமானம். மும்பையில் லோக்கல் பயணம் என்றால் அப்பாவின் கார். ஆனால், தனக்கு ஆடி கார்கள் மீதுதான் கண் இருப்பதாக அடிக்கடி சொல்வார் ரித்திகா. ‘சிவலிங்கா’ படப்பிடிப்பின்போது ராகவா லாரன்ஸின் ஆடி Q7 காரை இரவல் கேட்டு வாங்கிப் பயணித்தாராம் ரித்திகா சிங். அந்தளவு ஆடி வெறியை! 

நஸ்ரியா நசீம்

 

நஸ்ரியா


கார் என்றால் நஸ்ரியாவுக்குக் கொள்ளைப் பிரியம். தனது கார் மீது வெயில் அடித்தாலே நஸ்ரியாவால் தாங்க முடியாத அளவுக்குக் கார்களின் மீது பாசம் கொண்டவர். திருவனந்தபுரத்தில் ஒரு சின்ன மோதலில் தனது ரேஞ்ச்ரோவர் இவோக் காரின் பெயின்ட் உரிந்ததற்கே, அதற்குக் காரணமான வேறொரு கார் டிரைவரை நடுரோட்டில் இறங்கி ‘லெஃப்ட் அண்ட் ரைட்’ வாங்கிவிட்டார். அதற்குப் பிறகு மறுபடியும் ஒரு குட்டி ஆக்ஸிடென்ட். ‘உனக்கு ரேஞ்ச்ரோவர் ராசி இல்லை செல்லம்’ என்று பென்ஸ் C க்ளாஸ் காரை வாங்கிப் பரிசளித்திருக்கிறார் அவரது கணவர் ஃபஹத் ஃபாசில். இதிலாவது கோடு விழாம ஓட்டணும்!

ஸ்ரீதிவ்யா

 

ஶ்ரீதிவ்யா


சொன்னா நம்பணும்! நயன்தாராவின் வெறித்தனமான ரசிகை ஸ்ரீதிவ்யா. நயன் பண்ணுவதை அப்படியே ஃபாலோ பண்ணும் ரசிகைகளில் ஸ்ரீதிவ்யாவுக்குத்தான் முதலிடம். ‘காஷ்மோரா’ பட ரிலீஸின்போது, தனது தலைவி வைத்திருப்பதுபோல் கறுப்பு நிற பிஎம்டபிள்யூ காரை வாங்கி, அவரிடமே ஆசீர்வாதமும் வாங்கிவிட்டாராம். ஹைதராபாத்தில் நடந்த ஒரு பிரஸ்மீட்டில், தனது பிஎம்டபிள்யூவைக் காட்டி ‘நயன்தாராவின் ஆசி தனக்கு எப்போதும் வேண்டும்’ என்று நெக்குருகவும் செய்தார். 

தமன்னா

 

தமன்னா


தமிழில் கலக்கினாலும் மும்பையில்தான் தமன்னாவைச் சந்திக்க முடியும். அதனால் MH ரிஜிஸ்ட்ரேஷனில்தான் தனது கார்களையும் பதிவு செய்திருக்கிறார். முன்பு அப்பாவின் மிட்சுபிஷி அவுட்லேண்டரில்தான் பயணம். இப்போது ஷூட்டிங், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு தமன்னாவின் ஆடி A6தான் பறக்கும். கிட்டத்தட்ட 90 லட்சம் மதிப்புள்ள A6 கார் தவிர்த்து, 20 லட்ச ரூபாய் மதிப்பில் மஹிந்திரா XUV5OO காரும் தமன்னாவிடம் இருக்கிறது.

நிக்கி கல்ராணி

 

நிக்கி

‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’ லக்கி கேர்ள் நிக்கி. ஆம்! பரம்பரைப் பணக்காரப் பொண்ணு நிக்கியின் கராஜில் பிஎம்டபிள்யூ, ஹோண்டா சிவிக் என்று ரக ரகமாக 5 கார்கள் இருக்கின்றன. ‘சொந்த காசில் ஆடி வாங்கணும்’ என்ற சபதத்தைப் போன வருடமே நிறைவேற்றிவிட்டார் நிக்கி. புதிதாக 90 லட்சத்துக்கு ஆடி A6 கார் வாங்கிவிட்டார். டிரைவர் இருந்தாலும், செல்ஃப் டிரைவிங்தான் நிக்கியின் சாய்ஸ்! 

அஞ்சலி

 

அஞ்சலி

அஞ்சலி விஷயத்தில், சித்தியில் இருந்து கார் வரை எல்லாமே சீக்ரெட்தான். ‘சிங்கம் 2’ குத்துப்பாட்டு ரிலீஸுக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளுக்கு கறுப்பு நிற பிஎம்டபிள்யூவில் வந்திறங்கி ஷாக் கொடுத்தார். புதுசா வாங்கினதா? யாராவது கிஃப்ட் பண்ணினதா என்று ‘எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’ ரேஞ்சில் சமூகப் போராளிகள் மண்டையைக் குடைந்து கொண்டிருக்க, கூலாக அந்த காருக்கு முன்பு எடுத்த போட்டோவைப் போட்டு நெட்டில் வைரல் ஆக்கிவிட்டது அஞ்சலிப் பாப்பா. யாருக்காவது உண்மை தெரிஞ்சா சொல்லிடுங்கப்பா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்