Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘பறவைகளின் சத்தமே எங்களுக்கு அலாரம்!’ மலைவாழ் குழந்தைகள் குஷி

குழந்தைகள்

கோடை  விடுமுறை என்றாலே குழந்தைகளைக் கையில் பிடிக்க முடியாது. விளையாட்டு, ஆட்டம், பாட்டம் என வீட்டை அமர்க்களப்படுத்தி விடுவார்கள். மால், பீச், தியேட்டர் என்று வழக்கமாகப் போகும் இடங்கள் அல்லாமல், மலைவாழ் மக்கள் குடியிருக்கும் இடத்துக்கு அழைத்துப் போனால் எப்படியிருக்கும் என்பதை நிரூபித்துக் காண்பித்திருக்கிறார்கள் மதுரை செசி மையம் மற்றும் சீடு அமைப்பினர். குழந்தைகள் கலந்துகொண்ட இந்தச் சுற்றுலாவில், தமிழக கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 40 பேர் கலந்து கொண்டு கர்நாடகா தடியண்டமோல் மலைக்குச் சென்று வந்திருக்கிறார்கள். 

சம்மர் கேம்ப் சென்று வந்த குழந்தைகளிடம் ‘கேம்ப் எப்படியிருந்தது?’ என்றதும் பேச ஆரம்பித்தார் சிநேகா, திருவண்ணாமலையைச் சேர்ந்த பள்ளி மாணவி, ''நாலு நாள் செமையா இருந்தது. லீவ்ல டூர் போறோம்னு நினைச்சிருந்தேன். இங்கிருந்து பஸ்ல டிராவல் பண்ணினோம். பஸ் பயணத்துல பாட்டு, ஆட்டம் பாட்டம்னு செம ஜாலியா இருந்தது. கர்நாடகாவில் குடகு மாவட்டம் யதுகபாடி கிராமத்தில் உள்ள தடியண்டமோல் மலைக்குப் போனோம். கொடைக்கானலுக்குப் போனதுமாதிரி குளிர் காதை அடைச்சது. குளிச்சு முடிச்சதும் சாப்பிட ரெடியானோம். நம்மூர் இட்லி, தோசை எல்லாம் இல்லை. ‘கடம் புட்டு’ என்றொரு உணவைச் செய்திருந்தனர். பார்க்க நம்மூர் புட்டு மாதிரிதான் இருந்தது. தொட்டுக்கொள்ளச் சாம்பார். சூப்பர் டேஸ்ட். வழக்கமான தோசை, இட்லி சாப்பிட்ட எங்களுக்கு அவங்க உணவு புது சுவையா இருந்தது.

 அங்க இருந்த மக்கள் எல்லாம் ‘குடவா’ மொழியில பேசினாங்க. தமிழ், கன்னடம், மலையாளத்தின் கலவையாக இருந்தது அந்த மொழி. மலையில இருக்கிற பழங்குடி மக்களோட தங்கி இயற்கை அழகை ரசிச்சோம். டி.வி சத்தம் இல்ல... கார், பைக், டிரெயின்.. இப்படி எந்தச் சத்தமும் இல்லாத அழகான கிராமம். பறவைங்க, யானைகள், மான்களைக் கண்குளிர பார்த்தோம். எப்பவும் கால்ல சங்கிலி போட்டு கட்டியிருக்கிற யானையா இல்லாம காட்டுல தன் போக்குல வாழ்ற யானைக்கூட்டத்தைப் பார்க்க அவளோ அம்சமா இருந்துச்சு. 
அவங்களோட வாழ்க்கைப் பாடத்தைப் படிச்சோம். அதோட அவங்க ஸ்பெஷலா ஆடுற நடனமான 'உருட்டுக்கொட்டு' நடனத்தையும் கத்துகிட்டு வந்திருக்கோம்" என்கிற குழந்தைகளின் முகத்தில் அத்தனை சந்தோஷம். 

குழந்தைகள்

சிநேகாவைத் தொடர்ந்து நான் சொல்றேன் நான் சொல்றேன் என்று துரைக்கமலத்தைச் சேர்ந்த அருண்குமார் ''இங்க இருக்கிற மக்கள் தனக்காக காட்டை அழிக்கலை. காட்டை சுத்திப்பார்க்கிறப்ப அதை உணர முடிஞ்சது. சுனையில வர்ற நீரைப் பயன்படுத்துறாங்க. மனுஷங்களோட இயல்பா மிருகங்களும் பயமில்லாம நடமாடினதைப் பாக்க அவளோ ஆச்சர்யமா இருந்தது. 'துடி'ங்கிற தோலாலான இசைக்கருவியைப் பயன்படுத்தி இசைக்கச்சேரி நடத்திக் காட்டினாங்க. ஒருத்தங்க வீட்டுல விஷேசம்னா இந்தக் கருவியை இசைச்சு தங்களோட சந்தோஷத்தை வெளிப்படுத்திப்பாங்களாம். கடைசியா சந்தித்த இந்த மக்களோட தலைவர் வாழ்க்கை எங்க மனச கஷ்டப்படுத்தியிருச்சு. ஆமா, தன்னோட பசங்க படிக்கணும்னு தெனமும் தோள்ல தூக்கி வைச்சுகிட்டு போய் ஸ்கூல்ல விடுவாராம். படிக்காதவர்... மக்களோட உரிமைக்காக போராடுற அவர் பேர் முத்தப்பா. தன் மக்களுக்கு எதிராகப் போடப்படுற வழக்குகளைத் தனியாளாக சந்திக்கிறவராம். கிரேட்ல. ‘பறவைகளின் சத்தமே எங்களுக்கு அலாரம்!’னு இங்க இருக்கிற மலைவாழ் குழந்தைகள் குஷியாக சொல்கின்றனர். மொத்ததுல இந்த விடுமுறை எங்க மனசுக்கு நிறைவா இருந்தது''

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close