Published:Updated:

10 ஆண்டுகளில் திறந்தவெளி கழிவறை முடிவுக்கு வரும்: ஜெய்ராம் ரமேஷ்

Vikatan Correspondent
10 ஆண்டுகளில் திறந்தவெளி கழிவறை முடிவுக்கு வரும்: ஜெய்ராம் ரமேஷ்
10 ஆண்டுகளில் திறந்தவெளி கழிவறை முடிவுக்கு வரும்: ஜெய்ராம் ரமேஷ்
10 ஆண்டுகளில் திறந்தவெளி கழிவறை முடிவுக்கு வரும்: ஜெய்ராம் ரமேஷ்

அகர்தலா: இந்தியாவில் திறந்தவெளி கழிவறை பயன்படுத்துவது 10 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.‌‌

அகர்தலாவில் நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெய்ராம் ர‌மேஷ் 'திறந்தவெளி கழிவறையை பயன்படுத்துவது முதலாவதாக சிக்கிம் மாநிலத்தில் விரைவில் கட்டுப்படுத்தப்பட்ட மாநிலமாக இருக்கும். பின்னர் கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களான மனிப்பூர், மிஜோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் படிப்படியாக கட்டுப்படுத்தப்படும். தற்போது, இந்தியாவில் 60 சதவீதம் பேர் திறந்தவெளியை பயன்படுத்துகிறார்கள். மொத்தம் உள்ள 2,40,000 கிராம பஞ்சாயத்துகளில் 10 சதவீதம் மட்டும் தான் தூய்மை கிராமம் அடைந்துள்ளது. இந்தியாவில் திறந்தவெளி கழிவறை பயன்படுத்துவது இன்னும் 10 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வரப்படும்' என்று கூறியுள்ளார்.