ஒவ்வொரு சதுர அடிக்கு 5 பாம்பு... 2500 மீட்டருக்கு தெறிக்கும் எரிமலை... உலகின் ஆபத்தான இடங்கள்! #DangerousPlaces | Most dangerous places on the earth

வெளியிடப்பட்ட நேரம்: 10:02 (21/05/2017)

கடைசி தொடர்பு:11:44 (29/11/2017)

ஒவ்வொரு சதுர அடிக்கு 5 பாம்பு... 2500 மீட்டருக்கு தெறிக்கும் எரிமலை... உலகின் ஆபத்தான இடங்கள்! #DangerousPlaces

உலகின் மிக மோசமான இடங்களைப் பார்க்க ஆசையா?

பாம்பு

கிழக்கு கலிஃபோர்னியாவில் உள்ளது மரணப்பள்ளத்தாக்கு (Death Valley). இந்த உலகம்தான் நம் வீடு என்றால்  வீட்டில் இருக்கும் அடுப்புதான் இந்த இடம். அவ்வளவு வெப்பம். சென்னைவாசிகள் 42 டிகிரிக்கே ஃபிரிட்ஜுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள் ஆனால், அந்த இடத்தில் கிட்டத்தட்ட 57.7 செல்சியஸ் (134 ஃபேரன்ஹீட்) வரை வெப்பம் பதிவாகியுள்ளது. தண்ணீர் இல்லாமல் அதிகபட்சமாக 14 மணி நேரம்தான் அங்கு உயிருடன் வாழ முடியும்..

பெயர்: Death Valley
இடம்: Eastern California

 

பாம்பு


ஆப்ரிக்கா கண்டத்தில் எத்தியோப்பியாவில் உள்ளது இந்த டானாகில் பாலைவனம்.சராசரி வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் கொண்ட இந்த இடத்தில் எப்போது வேண்டுமானாலும் சீறும் எரிமலைகளும் உண்டு. இலவசமாக நச்சு வாயுக்களை உமிழும் வெந்நீர் ஊற்றுகளும் அடக்கம். எப்போது எது வெடிக்கும் என்றே தெரியாத இந்தக் கொடூரமான இடத்தை ’’உலகின் நரகம்’’ என்கிறார்கள். ஆனாலும் சாகசப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். 

பெயர்: Danakil Desert
இடம்: Ethiopia

 

பாம்பு


உலகிலேயே அதிவேகமான காற்று வீசும் இடம் இந்த மவுண்ட் வாஷிங்டன். அதிகபட்சமாக ஒரு மணிநேரத்திற்கு 203 மைல்கள் வேகத்தில்  இங்கு காற்று வீசியிருக்கிறது. (ஷோயப் அக்தர் போட்டதே மணிக்கு 160 கிமீ தான்) மேலும் மைனஸ் 40 டிகிரிக்கும் கீழ் குளிர், திடீரென்று ஏற்படும் பனிப்பொழிவு என மிகவும் ஆபத்தான இடமாக இருக்கும் இந்த சிகரம், உலகின் உயரமான  (கடல் மட்டத்தில் இருந்து 6,288 அடி) மலைச் சிகரங்களுள் ஒன்று..
பெயர்: Mount Washington (New Hampshire)
இடம்: United States of America

 

இது போன்று  இந்தியாவிலும் ஆபத்தான சுற்றுலா தளங்கள் உள்ளன...!!!

 

பாம்பு


இந்தோனேசியா - சுமத்ரா தீவில் உள்ளது இந்த மாபெரும் மலை.. பார்க்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும் இந்த மலைதான் கடந்த ஏழு வருடங்களாக அங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவருகிறது. ஆம், இந்த சினாபுங் மலை ஓர் எரிமலை. வருடத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது சீற்றம் கொள்ளாமல் இருந்ததில்லை. கடைசியாக 2016-ஆம் ஆண்டு நவம்பர் வரை தொடர்கிறது. எப்போது சீற்றம் ஏற்படும் என்ற பயத்திலும், சீற்றம் ஏற்பட்டால் சுமார் 2,500 மீட்டர் வரை தெறிக்கும் எரிமலைக் கற்களிலும் , சூழ்ந்துகொள்ளும் புகைமண்டலத்திலும் யார்தான் வாழமுடியும்?

பெயர்: Mount Sinabung
இடம்: Indonesia

 

பாம்பு


இந்தப் படத்தைப் பார்த்த பிறகு விளக்கம் வேறு வேண்டுமா? பிரேசிலில் இருக்கும் குட்டித்தீவுதான் இந்த பாம்புத்தீவு. ஒரு சதுர அடிக்கு ஐந்து பாம்புகள் இருக்கிறதென்றால், இந்தத்தீவில் எத்தனை பாம்புகள் இருக்கும் என யூகித்துக்கொள்ளுங்கள். இங்கு இருக்கும் கலங்கரை விளக்கம்கூட ஆட்டோமேட்டட்தான்.. ஏனென்றால் இங்கிருக்கும் பாம்புகள் அனைத்தும் கொடிய விஷத்தன்மை உடையவை. போனால் மர்கயாதான் என்பதால், பிரேசில் அரசாங்கம் மனிதர்கள் செல்லத் தடை விதித்துள்ளது.

பெயர்: ilha de queimada grande - snake island
இடம்: Brazil

 

பாம்பு


 உலகத்தில் வித்தியாசமான, விதவிதமான உயிரினங்கள் அதிகம் வாழும் இடம் . இங்கிருக்கும் பறவை இனங்கள் மட்டுமே ஆயிரத்தைத் தாண்டுகிறது. கிட்டத்தட்ட அவதார் படத்தில் வரும் உலகின் மினியேச்சர் என்று இந்த இடத்தைச் சொல்லலாம். சரி, பார்த்தாலே சுற்றுலா செல்லத்தூண்டும் இடம் இந்த லிஸ்டில் எப்படி? பார்க்க மட்டும்தான் அழகு. உள்ளே சென்றால் ஆபத்துதான்.. வித்தியாசமான உயிரினங்கள் இருப்பதாலோ என்னவோ, இங்கே செடிகளை உரசினாலே எரிச்சலும், மயக்கமும் வரும் அளவுக்கு தாவரங்களில் தொடங்கி, விலங்குகள் அனைத்தும் மிகவும் ஆபத்தான, விஷத்தன்மை உடைய ஜந்துக்கள். அட எவற்றையும் தொடாமல் பார்த்துவிட்டு வரலாமா என்றால் இங்கு சென்று உடலில் சிறிய கீறல் ஏற்பட்டால் கூட ஒட்டுண்ணிகளால் மரணம் ஏற்படலாம். ரெடியா?

பெயர்: Madidi National Park
இடம்: Bolivia

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்