Published:Updated:

பைக்கில் சடலத்தைக் கடத்தி வேலூரைத் தெறிக்கவிட்ட பரபரப்பு சம்பவம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பைக்கில் சடலத்தைக் கடத்தி வேலூரைத் தெறிக்கவிட்ட பரபரப்பு சம்பவம்!
பைக்கில் சடலத்தைக் கடத்தி வேலூரைத் தெறிக்கவிட்ட பரபரப்பு சம்பவம்!

பைக்கில் சடலத்தைக் கடத்தி வேலூரைத் தெறிக்கவிட்ட பரபரப்பு சம்பவம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர் விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர் தங்கவேலு. இவர் கொணவட்டத்திலுள்ள   புறக்காவல் நிலையத்தில் இரவுப் பணி மேற்கொள்வது வழக்கம். திங்கட்கிழமை இரவு வழக்கம்போல் பணிக்கு வந்தவர் அதிகாலை 5.40 மணிக்கு கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள டீ கடைக்குச் சென்றுள்ளார். அப்போது கொணவட்டத்திலிருந்து சதுப்பேரி செல்லும் சாலையில் இரண்டு பைக்குகளில் 5 பேர் வேகமாகச் சென்றனர். அப்போது ஒரு பைக்கில் நடுவே உட்கார்ந்து இருந்தவரது கால்கள் சாலையில் உரசியபடி சென்றன. அவர்கள் போதையில் இருக்கலாம் என சந்தேகமடைந்த தங்கவேலு, பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள பாலத்தின் கீழே இரண்டு பைக்குகளும் சென்றன. அங்கு சாலையில் கால்கள் உரசியபடி வந்தவரை கீழே தள்ளினர். அப்போது ஏட்டு தங்கவேலு அங்கு வந்துவிட்டார். இதனால் ஒரு பைக்கை அங்கேயே போட்டுவிட்டு மற்றொரு பைக்கில் 3 பேர் சென்றனர். ஒருவர் சாலையின் ஓரமாக வேகமாக ஓடிச் சென்று விட்டார். கீழே தள்ளியவரை பார்த்தபோது அவர் சடலமாக கிடந்துள்ளார். தலை, கை, கால், வயிறு உள்பட பல்வேறு இடங்களில் சரமாரி வெட்டப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டன. இதையடுத்து ஏட்டு தங்கவேலுவும் மேலும் அங்கு வந்த பொதுமக்களும் அந்த மர்ம ஆசாமிகளைப் பிடிக்க பைக்கில் பின்தொடர்ந்து விரட்டினர்.

இதற்கிடையில் இச்சம்பவம் பற்றி தங்கவேலு வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் பாண்டிக்குத் தகவல் தெரிவித்துவிட்டு தொடர்ந்து விரட்டினார். முள்ளிப்பாளையம் திடீர் நகரில் நுழைந்த 3 பேரும், குறுகிய சாலைகளில் நுழைந்து கஸ்பா பகுதியை நோக்கிச் சென்றனர். இதையடுத்து கொலையாளிகள் கஸ்பா நோக்கி வருவதாகவும் கொலையாளிகளுக்குச் சுமார் 22 வயது இருக்கும் என்றும் வேலூர் தெற்கு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தெற்கு போலீஸார் கஸ்பாவில் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர். மூன்று மர்ம ஆசாமிகளும் போலீஸார் மீது மோதினர். அப்போது அவர்கள் வைத்திருந்த கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கீழே விழுந்தது. போலீஸார் சுற்றி வளைக்க முயன்றபோது பைக்கை அங்கேயே போட்டுவிட்டு கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக் கொண்டு மூன்று பேரும் கருவேலமர புதரில் புகுந்து தப்பிச் சென்று விட்டனர். எவ்வளவு முயன்றும் போலீஸாரால் அந்த மர்மக் கும்பலில் ஒருவரைக் கூட பிடிக்க முடியவில்லை. 

பின்னர் கொலையாளிகள், சடலத்தைக் கடத்த பயன்படுத்திய இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்து வடக்கு போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். இதனிடையே போலீஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.பி பகலவன், டி.எஸ்.பி ஆரோக்கியம் மற்றும் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைச் சோதனையிட்டனர். அதில் வாகனங்கள் தொடர்பான சான்றுகள் இல்லை. கொலையாளிகளை விரைந்து பிடிக்குமாறு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். அதன் பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையில் தலைமறைவாகியுள்ள கொலையாளிகளைப் பிடிக்க 30-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்?கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்ற எந்த விவரமும் தெரியவில்லை. இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வேலூரில் பட்டப் பகலில் பொதுமக்களை அதிர வைக்கும் வகையில் நடந்துள்ள இச்சம்பவம் சினிமாவில் வரும் காட்சிகளை மிஞ்சும் வகையில் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு