'சென்னையில் திருவையாறு’ இசைத் திருவிழாவுக்கு இது ஒன்பதாவது ஆண்டு. இந்த வருடம் டிசம்பர் 18 முதல் 25 வரை மார்கழிக் குளிர் பக்கவாத்தியத்துடன் இசை மழையில் நனைய இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த இசை மேளாவை நடத்தும் லஷ்மன் ஸ்ருதி இன்னிசைக் குழுவின் லஷ்மன், இந்த சீஸனுக்கான ஹைலைட்களை வெளிச்சமிட்டார்.
''தொடர்ந்து எட்டு நாட்கள் உற்சாக உற்சவமாக அரங்கேறும் சென்னையில் திருவையாறு விழா. இந்த வருடம், எஸ்.ஆர்.ஜி.எஸ். மோகன்தாஸ் நாகஸ்வரம், பி.எஸ்.நாராயணசாமியின் பஞ்ச ரத்னக் கீர்த்தனைகள், பிர்கூ மகாராஜின் கதக் நடனம், நித்யஸ்ரீ மகாதேவன், உன்னிகிருஷ்ணன், சுதா ரகுநாதன் போன்ற ஜாம்பவான்களின் வாய்ப்பாட்டு, ஷோபனாவின் பரதநாட்டியம் என எல்லாமே பிரமாதமான நிகழ்ச்சிகள். ஒரே சமயத்தில் 300 கலைஞர்கள் மேடையில் அமர்ந்து பஞ்சரத்னக் கீர்த்தனைகள் பாடும் அளவுக்கு பிரமாண்டமான மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'சென்னையில் திருவையாறு’ங்கிறது இப்ப ஒரு பிராண்ட் ஆகிருச்சு. அரங்கத்தில் இருக்கைகளின் எண்ணிக்கை தாண்டியும் கூட்டம் திரண்டு வந்து நிக்குது. ஆனா, முதல் வருஷம் இந்த நிகழ்ச்சியை நடத்த நாங்க பட்ட சிரமத்தை இப்போ நினைச்சாலும் தூக்கி வாரிப் போடும். இப்படி ஒரு இசை நிகழ்ச்சி நடத்தலாமேனு விளையாட்டா முடிவெடுத்து
##~## |
சென்னை திருவையாறின் ரசனை அத்தியாயங்களை ரசிப்போம்... மகிழ்வோம்!