Published:Updated:

கவிஞர் நா.காமராசன் காலமானார்..! அவருக்கு வயது 75

கவிஞர் நா.காமராசன், மே 24ம் தேதி இரவு சென்னையில் திடீரென காலமானார். அவருக்கு வயது 75.

நா.காமராசன், 1942 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் பிறந்தார். அவருடைய அப்பா பெயர் நாச்சிமுத்து, அம்மா இலட்சுமி அம்பாள். அவர், மதுரை தியாகராயர் கலைக்கல்லூரியில் படிக்கும்போது, அந்த நேரத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்று சிறை சென்றவர். சிறு வயது முதலே தமிழ்மீது தீராத ஆர்வத்தைக்கொண்டிருந்தார். அவர், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் அதிகாரியாகவும் பணியாற்றினார்.

எம்.ஜி.ஆர் காலத்தில் திரைப்படத்துறையில் அறிமுகமான இவர், பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். மேலும், அ.தி.மு.க-வில் முக்கிய பதவிகளிலும் இருந்துள்ளார். காமராசனின் எழுத்துகளில் நிறையப் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் வசித்துவந்த அவர், இன்று திடீரென உடல்நலக் குறைபாட்டின் காரணமாக உயிரிழந்தார்

ஒருமுறை, நா.காமராசன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், 'கம்பரும், இளங்கோவடிகளும் தன்னை பாதித்த கவிஞர்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். நீங்கள் எதனை ரசிப்பீர்கள் என்ற கேள்விக்கு, 'நான், தமிழை மட்டும்தான் ரசிப்பேன். ஏனென்றால், தமிழ்தான் என் உயிர்' என்று குறிப்பிட்டிருந்தார்.