Published:Updated:

மதுபானக் கடையை அடித்து நொறுக்கிய பெண்கள் - தமிழகத்தில் தொடரும் போராட்டம்..!

 தமிழ்நாடு முழுவதும் அரசு டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு எதிராக, மக்கள் போராட்டம் வலுத்துவருகிறது. இந்த நிலையில் சென்னை புழல், லட்சுமிபுரம் பகுதியில் டாஸ்மாக் விற்பனை நேரத்துக்கு முன்னும், பின்னும் மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு ஆட்கள் வருவதைக் கண்ட பொதுமக்கள், போலீஸுக்கு தகவல் கொடுத்தனர் . ஆனால் போலீஸார்,  புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

 இந்த நிலையில், இன்று அதே பகுதியிலுள்ள பச்சையப்பன் காலனியில் ரகசியமாக மக்கள் கண்காணித்தனர். அங்கே,  மதுபானங்கள் விற்பனை ஜரூராக நடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் வீட்டுக்குப் போய் முறையிட்டனர். ரவிராஜ்   ஆலோசனைப்படி, அவர் தலைமைலேயே  மது விற்பனை  செய்யும் இடத்துக்குள் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த ஆயிரக்கணக்கான மது பாட்டில்களைச் சாலையில்  போட்டு உடைத்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் உறுதிமொழியை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

அடுத்த கட்டுரைக்கு