Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஏலியனை அழைக்கும் ஏஞ்சலே!' - தீபாவுக்கு சில தடாலடி யோசனைகள்!

புலி பதுங்கி பாய்வது போல், புயலுக்கு முன் அமைதி போல், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா, திடீர் திடீர்ன்னு சர்ப்ரைஸ் கொடுப்பதில் வல்லவர். இதோ, சமீபத்தில் அவர் விட்ட அறிக்கையில், 'சசிகலா, ஓ.பி.எஸ், இ.பி.எஸ் பற்றி புரிந்துகொண்ட தொண்டர்கள் என் பின்னே வந்துவிட்டார்கள். அவர்களின் சூழ்ச்சியையும், வஞ்சகத்தையும் வீழ்த்தி, அ.தி.மு.க எனும் மக்கள் இயக்கத்தை துரோகிகளிடமிருந்து மீட்டிட, மாலுமியாக, படைத்தலைவியாக (ஆவ்வ்வ்வ்வ்!) பணியாற்றிட அனைத்து எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை வாஞ்சையுடன் 'அழைக்கிறேன்' " என்று படாசோக்கான தூண்டில் அறிக்கை விட்டு அழைப்பு விடுத்திருக்கிறார். அவர் அழைப்பை ஏற்று தீபா பின்னே செல்ல எம்.எல்.ஏ - எம்.பிக்கள் முடிவெடுக்க....கண்டிப்பாக போவதில்லை. ஸோ, மக்களின் நலன் கருதி வேறு எதையெல்லாம், யாரையெல்லாம் அழைக்கலாம்? 

deepa

உங்களின் பரம வைரிகளாகிவிட்ட இ.பி.எஸ்ஸும், ஓ.பி.எஸ்ஸும் பிரதமரைப் பார்த்து, 'காவிரியில் தண்ணீர் வர ஏற்பாடு செய்யுங்கள்' என்று கோரிக்கை வைத்து, தமிழக மக்களின் பாராட்டை பெற்றிருக்கிறார்கள். அவங்க பிரதமர்கிட்ட பேசுனா நீங்க நேரா தண்ணிகிட்டயே டீல் பேசுங்க. கர்நாடக எல்லையில் போய் நின்று இருகரம் நீட்டி, 'கர்நாடக அணைகளில் சும்மா தூங்கிக் கொண்டிருக்கும் தண்ணி மூலக்கூறுகளே, அவங்களுக்கு டிமிக்கி கொடுத்துட்டு, தமிழ்நாடு பக்கம் வாங்க. நீங்கள் ஆட்சி செய்வதற்காக காவிரி காத்திருக்கிறது. நீங்கள் துள்ளி விளையாட வங்காளவிரிகுடா பரந்து விரிந்திருக்கு' என்று அழைக்கலாம். 'தீபா அழைத்து வராத தண்ணியுண்டோ?'ன்னு வரலாறு பிற்பாடு நின்னு பேசும்.
 
ஜெ மறைந்தபோது, தீபா பின்னே பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.கவினர் அணிதிரண்டு வந்தது உண்மைதான். ஆனால், இப்போ அவரது கணவர் மாதவனே அவரை நம்பாமல், தனிக்கட்சி ஆரம்பிச்சு தனி ஆவர்த்தனம் பண்ண ஆரம்பிச்சுட்டார். அதனால், இனி மக்களை நம்பி பயனில்ல. நேரா ஏலியன்ஸ்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டியதுதான். 'ஏலியன்ஸ்களே வாருங்கள். இந்த ஏஞ்சலை கொஞ்சம் பாருங்கள்' என்று வான்முட்டும் அளவுக்கு பிளக்ஸ் வைத்து அழைத்துப் பார்க்கலாம். இல்லைன்னா, அப்படியே தனி விமானத்தை வாடகைக்கு புடிச்சு, வேகமாக போய் மேகத்துல முட்டுக் கொடுத்து நின்னு, அழைத்துப் பார்க்கலாம். ஒருவேளை இரக்கப்பட்ட எலியன்ஸ்கள் 'இறங்கி' வந்து தீபா கட்சியில் இணைந்தால், 'அறிவியலுக்கு பிடிபடாத ஏலியன்ஸை ஒத்தை வார்த்தையில் கூப்புட்டு வந்த நாயகி'ன்னு வருங்காலம் சாயங்காலம் வரை தீபாவை புகழும்.
 
இன்னமும் வெள்ளியங்கிரி, ஜவ்வாது மலைப்பக்கம் சித்தர்கள் வசிப்பதாக நம்பிக்கை இருக்கிறது. அதனால், தனது அடிப்பொடிகளை அழைத்துக் கொண்டு ஜாகையோடு போய்த் தங்கலாம். 'சித்தர்களே, மலைகளில் திரிந்தது போதும். கடலலை போல திரண்டு வந்து என் கட்சியில் சேருங்கள். நீங்கள் மலைமேல் நடத்திய ராஜ்ஜியம் போதும். இனி தரையில் என்னோடு வந்து அரசியல் செய்யுங்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்து, ஓ.பி.எஸ், இ.பி.எஸ் பக்கம் இருக்கும் தொண்டர்களை எல்லாம் நம் கட்சிக்குக் கொண்டு வாருங்கள்'ன்னு உணர்ச்சி பெருக்கோடு அழைத்துப் பார்க்கலாம். கேக்கவே 'மலை'ப்பா இருக்கா? வேற வழி?

எனக்கு தெரிந்து இப்போதைக்கு ஒரே ஆளிடம் அதிக கூட்டம் இருப்பது பாகுபலி பார்ட் ஒன்னுல படத்துல வந்த காளக்கேயர்கள் தலைவன்கிட்டதான். அதனால், ராஜமெளலியிடம் பேசி, காளக்கேயர்களின் அட்ரஸை வாங்கி, அந்த பாஷையை கத்துக்கிட்டு போய் அவர்களை அழைக்கலாம். 'ட்டுர்ர்ரா.. என் கட்சிக்கு நீங்க வர்ர்ரா'ன்னு உரக்க அழைச்சுப் பார்க்கலாம். விதவிதமான ஆயுதங்களோடு உங்கள் பின்னே தமிழ்நாட்டுக்கு வந்து காளக்கேயர்கள் விநோத சத்தத்தோடு வந்தா எப்படி இருக்கும்? இங்க இருக்குறவங்க எல்லாம் ஊரைவிட்டு ஓடவேண்டியதுதான்.  அப்புறம் காளக்கேயர்கள் தலைவனை பதவி நீக்கம் பண்ணிட்டு நீங்க மகாராணி ஆயிடவேண்டியது தான்.
 
அப்படியும் காரியம் கைகூடி வரலன்னா, யோசிக்காம உங்க கணவர் மாதவனை கூப்பிட்டு, 'நாம ரெண்டு பேரும் தனித்தனியா காமெடி பண்ணப் போய்தான் ரீச் ஆகமுடியலை. அதனால சேர்ந்து காமெடி பண்ணுவோம்'னு முடிவுக்கு வந்தா நீங்களும் தப்பிச்சீங்க, நாங்களும் தப்பிச்சோம்! என்ன நாஞ் சொல்றது?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement