Published:Updated:

பிறந்து 10 நாள்களே ஆன குழந்தையை புதரில் வீசிய சோகம்..!

இரா.மோகன்
பிறந்து 10 நாள்களே ஆன குழந்தையை புதரில் வீசிய சோகம்..!
பிறந்து 10 நாள்களே ஆன குழந்தையை புதரில் வீசிய சோகம்..!

ராமநாதபுரத்தில் புதரில் வீசப்பட்ட பிறந்த பத்து நாள்களே ஆன குழந்தை மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோயில் அருகே முக்குடு சாலை பகுதியில் உள்ள புதருக்குள் குழந்தை அழுகும் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த பெண் கூச்சலிட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது பிறந்து 10 நாட்களே ஆன  பச்சிளம் பெண் குழந்தை கிடந்தது. உடனடியாக மீட்கபட்ட அந்த குழந்தை 108 ஆம்புலன்ஸ் மூலம் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு குழந்தைக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. தற்போது அந்தக் குழந்தை ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகனால் பாதுகாக்கபட்டு வருகிறது. இது தொடர்பாக நயினார் கோயில் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.