Published:Updated:

ரம்ஜான் நோன்பு நாளை தொடக்கம்.. சென்னையில் இலவச ’ஷஹர்’ உணவுக்கு சிறப்பு ஏற்பாடுகள்!

அஸ்வினி.சி
ரம்ஜான் நோன்பு நாளை தொடக்கம்.. சென்னையில் இலவச ’ஷஹர்’ உணவுக்கு சிறப்பு ஏற்பாடுகள்!
ரம்ஜான் நோன்பு நாளை தொடக்கம்.. சென்னையில் இலவச ’ஷஹர்’ உணவுக்கு சிறப்பு ஏற்பாடுகள்!

ரம்ஜான் நோன்பு நாளை தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

ரம்ஜான் நோன்பு நாளை தொடக்கம்.. சென்னையில் இலவச ’ஷஹர்’ உணவுக்கு சிறப்பு ஏற்பாடுகள்!



 

இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தின் 30 நாள்களிலும் நோன்பிருந்து ஐந்து வேளை தொழுகை செய்வார்கள். மேலும் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜானுக்கு நோன்பு தொடங்கப்படுவது வழக்கம். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பை தொடங்குவார்கள். 

இந்தாண்டு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை ஏதும் நேற்றுவரை தென்படவில்லை. எனவே ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பு தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இஸ்லாமியர்கள் நாளை ரம்ஜான் நோன்பைத் தொடங்குகிறார்கள். தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு சென்னையில் ’ஷஹர்’ என்ற உணவு இலவசமாக வழங்க 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.