Published:Updated:

பாலில் கலப்படமா? ராஜேந்திரபாலாஜிக்கு பால்முகவர்கள் சங்க தலைவர்  சவால்!

அஸ்வினி.சி
பாலில் கலப்படமா? ராஜேந்திரபாலாஜிக்கு பால்முகவர்கள் சங்க தலைவர்  சவால்!
பாலில் கலப்படமா? ராஜேந்திரபாலாஜிக்கு பால்முகவர்கள் சங்க தலைவர்  சவால்!

தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக பால் முகவர்கள் சங்கம் செயல்பட்டதாக நிரூபித்தால் பால் வணிகத்தை விட்டும், பொது வாழ்க்கையில் இருந்தும் விலகிட தயார்’ என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு பால்முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி சவால் விடுத்துள்ளார். 
 

பாலில் கலப்படமா? ராஜேந்திரபாலாஜிக்கு பால்முகவர்கள் சங்க தலைவர்  சவால்!


 

பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக தனியார் பால் நிறுவனங்கள் பல்வேறு ரசாயன பொருட்களை கலப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி  குற்றம்சாட்டினார். தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயன பொருட்கள் கலப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிரடியாக நேற்று அறிவித்தார். தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக  பால்முகவர்கள் சங்கம் செயல்படுவதாகவும்,  தவறு செய்த தனியார் பால் நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். 

இந்நிலையில் தனியார் பாலில் கலப்படம் என அமைச்சர் பேசியது முகவர்களுக்கு கவலையளிப்பதாக பால்முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி இன்று தெரிவித்துள்ளார். தனியாருக்கு ஆதரவாக செயல்படுவதை நிரூபித்தால் பால் வணிகத்தை விட தயார் என்றும் அவர்  ராஜேந்திரபாலாஜிக்கு சவால்விடுத்துள்ளார்.