Published:Updated:

'அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவது கடினம்' - அமித் ஷா

குருபிரசாத்
'அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவது கடினம்' - அமித் ஷா
'அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவது கடினம்' - அமித் ஷா

மத்தியில் பி.ஜே.பி அரசு ஆட்சிக்கு வந்து, நேற்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, மோடி, அமித் ஷா, மத்திய அமைச்சர்கள்,  பி.ஜே.பி முதல்வர்கள் ஆகியோர், நாடு முழுவதும் சென்று மக்களிடம், பி.ஜே.பி அரசின் சாதனை குறித்து விளக்க உள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசின், மூன்றாண்டு ஆட்சி குறித்து, பி.ஜே.பி தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மோடி அரசு மிகவும் வெளிப்படையான, தீர்க்கமான அரசு. கடந்த மூன்று ஆண்டுகளில், ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாமல் ஆட்சி செய்து வருகிறோம். குறிப்பாக, குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். 70 ஆண்டுகளில், முந்தைய அரசால் செய்ய முடியாததை எல்லாம், மிகவும் குறுகிய காலத்தில் பி.ஜே.பி அரசு சாதித்துள்ளது.


125 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவது கடினம். எங்களால் முடிந்தவரை வேலை வாய்ப்பை வழங்கியுள்ளோம். வேலை வாய்ப்பை தாண்டி, தொழில் முனைவோர்களை உருவாக்க ஊக்குவித்து வருகிறோம். இதுவரை 8 கோடி தொழில் முனைவோரை உருவாக்கியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.