Published:Updated:

நாளையுடன் முடிகிறது அக்னி நட்சத்திரம்..! குறையுமா வெயில்?

குருபிரசாத்
நாளையுடன் முடிகிறது அக்னி நட்சத்திரம்..! குறையுமா வெயில்?
நாளையுடன் முடிகிறது அக்னி நட்சத்திரம்..! குறையுமா வெயில்?

பருவ மழை பொய்த்ததால், இந்த ஆண்டு கடுமையான வெயில் நிலவி வருகிறது. கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, நாடு முழுவதும் இந்தாண்டு, சராசரியை விட அதிகளவு வெயில் வாட்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. ஆனால், தமிழகத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்தது.


குறிப்பாக, கடந்த 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதற்குப் பிறகு வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளையுடன் (28 ஆம் தேதி) அக்னி நட்சத்திரம் முடிகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறையுமா? என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில், "வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக  40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது.