Published:Updated:

'எதிர்க்கட்சிகளுடன் டிஸ்கஷன்... பின்புதான் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு!' - அமித்ஷா ட்விஸ்ட்

ர.பரத் ராஜ்
'எதிர்க்கட்சிகளுடன் டிஸ்கஷன்... பின்புதான் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு!' - அமித்ஷா ட்விஸ்ட்
'எதிர்க்கட்சிகளுடன் டிஸ்கஷன்... பின்புதான் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு!' - அமித்ஷா ட்விஸ்ட்

இந்திய ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் சீக்கிரமே முடிய உள்ளது. எனவே, அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி டெல்லி அரசியல் வட்டாரத்தில் உலா வரும் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. இந்நிலையில், பா.ஜ.கவின் தேசியத் தலைவர் அமித் ஷா, 'எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்புதான் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்று அறிவிக்கப்படும்', என்று ட்விஸ்ட் கொடுத்துள்ளார். 

பா.ஜ.க தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்னும் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்று அறிவிக்கப்படவில்லை. ஆனால், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு 'மதச்சார்பற்ற ஒரு நபரைத்தான் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும்' என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் தான் அமித் ஷா, 'நாங்கள் இதுவரை யாரையும் ஜனாதிபதி வேட்பாளர் என்று தேர்வு செய்யவில்லை. நாங்கள் முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் ஆலோசிப்போம். பின்னர், எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிப்போம். பின்னர்தான் ஜனாதிபதி வேட்பாளராக யாரை முன்னிறுத்துவோம் என்பது பற்றிய அறிவிப்பை வெளியிடுவோம்' என்று கூறியுள்ளார். இதனால் யாரெல்லாம் ஜனாதிபதி தேர்தலுக்கான களத்தில் இருப்பார்கள் என்று தெரியாத நிலை நீடிக்கிறது.