Published:Updated:

ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டார்!

ர.பரத் ராஜ்
ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டார்!
ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டார்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதினின் முக்கியத் தலைவர்  (commander) சப்சர் அஹ்மத் பட் (Sabzar Ahmad Bhat) ராணுவத்தினருடனான் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 28.

ஹிஸ்புல் முஜாஹிதினின் தலைவராக இருந்த புர்கான் வானி கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொல்லப்பட்டார். அப்போது, வானியின் இறுதிச் சடங்குக்காக பொதுத் தளத்தில் காணப்பட்டார் பட். அதன் பின்னர் மறைவு வாழ்க்கையில் வாழ்ந்து தீவிரவாத செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தின் ட்ரால் பகுதியில் ராணுவத்தினருடன் நடந்த தாக்குதலின்போது அவர் உயிரிழந்தார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் 2015ஆம் ஆண்டு ஹிஸ்புல் அமைப்பில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. வெகு சீக்கிரமாகவே, ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின் தலைவர் பொறுப்புக்குச் சென்ற பட்டை கொல்ல, இந்திய ராணுவத்தினர் பல மாதங்களாகவே முயன்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரது தலைக்கு 10 லட்சம் ரூபாய் கெடு விதித்து இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

பட்டின் இந்த கொலையால், மத்திய மற்றும் வடக்கு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மக்களில் ஒரு பகுதியினர் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி வருகிறார்களாம். தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.