Published:Updated:

மகாபலிபுரத்தில் தீ பற்றி எரிந்த கார்..! பெண் உள்பட 3 பேர் பலி..!

கார்த்திக் துரைமகாராஜன்.சி
மகாபலிபுரத்தில் தீ பற்றி எரிந்த கார்..! பெண் உள்பட 3 பேர் பலி..!
மகாபலிபுரத்தில் தீ பற்றி எரிந்த கார்..! பெண் உள்பட 3 பேர் பலி..!

காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரம் அருகே நேற்று இரவு கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒரு பெண் உள்பட 3 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோப்புப்படம்


சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். அந்தச் சாலையில், மகாபலிபுரத்தை அடுத்த கல்பாக்கம் அருகே உள்ள மணமை கிராமத்தில் நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் இருந்த பெண் உள்பட மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர். காரில் ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் மூன்று பேரின் உடல்களை கருகிய நிலையில் மீட்டனர். இதுகுறித்து கல்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் விபத்திற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.