வெளியிடப்பட்ட நேரம்: 07:28 (31/05/2017)

கடைசி தொடர்பு:08:10 (31/05/2017)

கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லப் போறீங்களா?

 ஜூன் 3, சனிக்கிழமை வந்தால், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வயசு 94. ராகுல்காந்தி, நித்திஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், சீதாராம் யெச்சூரி என்று இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் ஒன்றிணைத்து, மிகப் பெரிய அளவில் பிறந்தநாளைக் கொண்டாடத் திட்டமிட்டுவருகிறது தி.மு.க. ஆனால், இந்தப் பிறந்தநாள் விழாவில் ஒரே ஒரு தலைவர் மட்டும் கலந்துகொள்வது சந்தேகம் - அவர்... கருணாநிதியேதான். 

மாப்பிள்ளை இல்லாமல் கல்யாணமா? ஆம். கருணாநிதி விஷயத்தில் அப்படித்தான். 

ஒவ்வொரு பிறந்தநாளின்போதும், கருணாநிதிக்கு வாழ்த்துச் சொல்ல தொண்டர் படை குவியும். கூட்ட நெரிசலில் திக்குமுக்காடுவார்.  இந்த முறை, கூட்ட நெரிசலைத் தாங்கும் அளவுக்கு அவரின் உடல்நிலை இல்லை என்பதுதான் இதற்குக் காரணம். சமீபகாலங்களாக தி.மு.க. சார்பில் நடந்த கூட்டங்கள், விழாக்களில் அவர் கலந்துகொள்ளாததே இதற்குச் சாட்சி. மேலும் ஏழு வருடங்களாக அவர் வீல் சேரில்தான் வலம் வருகிறார் என்பதும் தமிழறியும்.

 

 

நாடே டிஜிட்டல்மயமாகி வரும் வேளையில், இந்தக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க தங்களின் தலைவர் பிறந்தநாளையும் டிஜிட்டலாக்க முடிவு செய்துவிட்டது தி.மு.க. http://wishthalaivar.com/ எனும் வெப்சைட்டை இதற்காகவே தொடங்கியுள்ளது. இதை Log-in செய்து திறந்து வைத்தவர், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த வெப்சைட்டைத் திறந்து, உங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம். இதற்கென இருக்கும் செக் பாக்ஸில் உங்கள் பெயர், மொபைல் எண், இ-மெயில் முகவரியுடன் உங்கள் மெசேஜை நீங்கள் ‘சப்மிட்’ செய்துவிட்டால் போதும். 2G மொபைலில் இருந்துகூட 4G வேகத்தில் பிறந்தநாள் வாழ்த்து உங்கள் தலைவரைச் சென்றடையும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க