Published:Updated:

சீனியர்களுக்கு இன்போசிஸ் நாராயணமூர்த்தி உருக்கமான வேண்டுகோள்!

சீனியர்களுக்கு இன்போசிஸ் நாராயணமூர்த்தி உருக்கமான வேண்டுகோள்!
சீனியர்களுக்கு இன்போசிஸ் நாராயணமூர்த்தி உருக்கமான வேண்டுகோள்!

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதாரத் தேக்கம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் என்று தொடர் அதிரடிகளால், இந்திய அளவில் கோலோச்சிய ஐ.டி நிறுவனங்களில் வேலையிழப்பு அதிகமாகியுள்ளது. குறிப்பாக வேலையில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்பும் செயல் அதிகமாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. பிரச்னை இன்னும் பூதாகரமாகும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறிவரும் நிலையில், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, 'சீனியர்கள் கொஞ்சம் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வாய்ப்பிருக்கிறது' என்று ஓபன் டாக் கொடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 'ஐ.டி நிறுவனங்களில் இருக்கும் சீனியர்கள் அவர்கள் சம்பளத்தில் ஒரு சின்ன விகிதத்தைக் குறைத்துக் கொண்டால் இளைஞர்கள் வேலை இழக்கும் பிரச்னையைச் சமாளித்துவிடலாம் என்று நினைக்கிறேன். இன்போசிஸ் நிறுவனத்தில் நடந்த ஓர் உதாரணத்தைப் பற்றியே நான் கூறுகிறேன். கடந்த 2001-ஆம் ஆண்டு கடும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, சீனியர்கள் நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து 'நாம் ஒரு சின்ன தியாகத்தைச் செய்வோம். இளைஞர்கள் வேலை இழப்பதைத் தடுப்போம்' என்று முடிவெடுத்து செயல்படுத்தினோம். 

2001, 2008-ஆம் ஆண்டுகளில் பொருளாதார மந்தநிலைகளை ஐ.டி நிறுவனங்கள் எதிர்கொண்டு நின்றது. இப்போது இருக்கும் இந்தச் சூழ்நிலையும் கடந்துவிடும். வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவரை திடீரென்று வேலையைவிட்டு கிளம்புங்கள் என்று சொல்வது நியாயம் கிடையாது. அவர்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கலாம்' என்று உருக்கமாக கூறியுள்ளார்.