Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதுதான் உலகின் காஸ்ட்லி கார்! இதன் மைலேஜ் தெரியுமா?

கார் என்றால் ஓடும்; சூப்பர் கார் என்றால் பறக்கும்; ஹைப்பர் கார் என்றால் தெறிக்கும். ஹைப்பர் கார்கள்தான் உலகின் பவர்ஃபுல் மற்றும் காஸ்ட்லி கார்கள். இதில் 'கோய்னிக்செக்' எனும் கார்தான் உலகின் காஸ்ட்லி காராக இருந்து வந்தது. இதன் விலை 5 மில்லியன் டாலர். அதாவது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 32 கோடி ரூபாய். இப்போது அதற்கெல்லாம் அண்ணனாக, மன்னனாக வந்துவிட்டது ‘ஸ்வெப்டெய்ல்’ என்னும் மாடல். 

ரோல்ஸ் ராய்ஸ் கார்

இது வாயில், காதில் நுழையாத நிறுவனத்தின் காரெல்லாம் இல்லை. நமக்கெல்லாம் பழக்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் மாடல்தான் இந்த ‘ஸ்வெப்டெய்ல்’. உலகின் அதிக பொருட்செலவில் தயாரான, உலகின் அதிக விலை கொண்ட கார் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறது ஸ்வெப்டெய்ல்.

காரைப் பார்த்துவிட்டு ‘மாடல் அப்படி ஒண்ணும் புதுசா இல்லையே’ என்று நினைத்தால் அதுதான் ஸ்வெப்டெய்லுக்கு வெற்றியே! ஆம்... 1920, 1930-களில் வெளிவந்த ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் க்ளாஸிக் டிசைனைக் கொண்டுதான் இந்த ஸ்வெப்டெய்ல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சொல்லப் போனால், ஒவ்வொரு பாகங்களின் டிசைனுக்கும் ஒவ்வொரு க்ளாஸிக் டிசைன் பின்புலம் உண்டு.

ரோல்ஸ் ராய்ஸ்

அதாவது, இதன் கதவு டிசைன், 1925-ல் வெளிவந்த பாந்தம் காரில் இருந்து எடுக்கப்பட்டது. இதன் பின்புற வடிவமைப்பு, 1934-ல் ரிலீஸான மற்றொரு பாந்தம் காரில் இருந்து எடுக்கப்பட்டது. கிரில், பான்ந்தியான் மாடலில் இருந்து உருவியது. காரின் மேற்கூரை, இன்டீரியர் எல்லாம் பாந்தம்-2 காரின் டிசைன். இப்படி கலந்துகட்டி டிசைன் செய்யப்பட்டிருப்பதுதான் ஸ்வெப்டெய்லின் ஸ்டைல். ஆனால், கூபே மில்லெனியல் டிசைன்! மற்றபடி இன்டீரியரில் மிக்ஸி, கிரைண்டர் தவிர எல்லா வசதிகளும் உண்டு. இதிலுள்ள ஒரு கடிகாரத்தின் விலை மட்டுமே ஒரு கோடி ரூபாயாம். 

ரோல்ஸ் ராய்ஸ்

காரின் லைட் வெயிட்டுக்காக வெளியே தெரியக்கூடிய அனைத்து பாகங்களிலும் அலுமினியம் ஃபினிஷ் கொடுத்திருக்கிறார்கள். இதுதான் ஹைப்பர் காருக்கு இணையான பெர்ஃபாமென்ஸை இந்த ரோல்ஸ்ராய்ஸுக்குத் தரவல்லது. இது ஒரு கஸ்டமைஸ்டு கார். அதாவது, நீங்கள் உங்கள் விருப்பப்படி என்ன கலர், எந்த மாதிரி டிசைன் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்தால் போதும்... ‘அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்’ என்றில்லாமல், நீங்கள் கேட்டபடியே உங்கள் காரை ரெடி பண்ணித் தருவார்கள். அப்படி இந்த கார் தயாரிக்க, இரண்டரை வருடங்கள் ஆனதாம். ஆனால், இதற்கான டிசைன் வேலைகள் 2013-லேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள்.

 

 

ஆனால், இதன் மைலேஜ் லிட்டருக்கு 1 அல்லது 1.2 கி.மீதான் இருக்கும் என்கிறார்கள். இத்தாலியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் இதை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார் ரோல்ஸ்ராய்ஸின் தலைமை அதிகாரி டார்ஸ்டான் முல்லர், ‘‘ஸ்வெப்டெய்ல் மிகவும் அற்புதமான கார். ஒரு தடவை இதில் இன்பச் சுற்றுலா சென்று பாருங்கள். நீங்களே இதை லவ் பண்ண ஆரம்பித்து விடுவீர்கள்’’ என்றார்.

அதற்கு 85 கோடிக்கும் மேலே செலவாகுமே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement