Published:Updated:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம் நிறைவு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் நிலவி வரும் முக்கியப் பிரச்னைகள், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், ஜி.எஸ்.டி மசோதா, விவசாய பிரச்னைகள் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடந்ததாகக் கூறப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம் நிறைவு

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவாக, நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு நிலப்பதிவுக்கான வழிகாட்டு மதிப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால், பத்திரப்பதிவு குறைந்து, அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. ரியல் எஸ்டேட் தொழிலும் சரிவைச் சந்தித்தது. கடந்த ஓராண்டில் மட்டும் அரசுக்கு 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம் நிறைவு

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றபின், அவரது தலைமையில் நடக்கும் 5வது அமைச்சரவை கூட்டம் இது. டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தொடர்ச்சியாகச் சந்தித்து வரும் இந்த சூழலில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.