Published:Updated:

இனி நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்..!

குருபிரசாத்
இனி நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்..!
இனி நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்..!

பெட்ரோல், டீசல் விலையை 15 நாள்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துவருகின்றன. ஆனால், பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்பட்டுவருகிறது. இதையடுத்து, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இனி நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்..!


அதன்படி புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகர் ஆகிய ஐந்து நகரங்களில் சோதனை அடிப்படையில், கடந்த மே 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், இந்த முறையை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிராதனை, எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைப்பதுகுறித்து அவர்கள் அமைச்சருடன் பேசினர். இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைப்பதற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, வரும் 16 ஆம் தேதி முதல் இந்த முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.