Published:Updated:

பயம்னு இல்லீங்... ஜெயிக்கணும்ங்!

ந.வினோத்குமார்படம் : ஜெ.தான்யராஜு

பயம்னு இல்லீங்... ஜெயிக்கணும்ங்!

ந.வினோத்குமார்படம் : ஜெ.தான்யராஜு

Published:Updated:
##~##

பொங்கி வரும் அழுகையைத் தொண்டையில் அடக்கிக்கொண்டு பேசினால் குரல் சற்றே பிசிறடிக்குமே... அப்படி ஒரு குரலில் பேசுகிறார் கதிர்வேல். மாற்றுத்திறனாளிகள் பிரிவில், மாநிலத்திலேயே முதல் மதிப்பெண்கள் பெற்று சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் மாணவர்!

 ''நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர்தானுங் என் ஊர்ங். நல்லாத்தான் பொறந்தேனுங். 'பையன் நல்லாத்தான் இருக்கான்’னு சொல்லிட்டு, போலியோ கொடுக்காம விட்டாங். அதனால், வலது கால் கொஞ்சம் பிரச்னையாயிடுச்சுங். கால் விந்திவிந்திதான் நடப்பனுங். இப்படி ஆயிடுச்சேன்னு சலிச்சுக்காம, 'உனக்கு ஒண்ணுமில்லடா’னு அப்பா-அம்மா தட்டித் தட்டித்தான் வளர்த்தாங்.

ஸ்கூல்லயும் 'நீ ரொம்ப ஸ்பெஷல்டா’னு, என் ஃப்ரெண்ட்ஸும் டீச்சர்ஸும் சப்போர்ட்டா இருந்தாங். ஓடுனா, நம்ம பிரச்னை மத்தவங்களுக்குத் தெரிஞ்சிடும் கிறதால விளையாடுறதுகூட இல்லைங். எந்நேரமும் படிப்பு படிப்புன்னே இருந்துட்டேனுங்!  

பயம்னு இல்லீங்... ஜெயிக்கணும்ங்!

பத்தாவதுல நான் எடுத்த 491 மார்க்கு டிஸ்ட்ரிக்ட் லெவல்ல மூணாவதுங். கவர்மென்ட் ஸ்கூல் லெவல்ல ஃபர்ஸ்ட்டுங். அப்ப எங்க மாவட்டத்துல சகாயம் சார் கலெக்டரா இருந்தாருங். வீட்டுக்கே வந்து பொன்னாடை போர்த்தி, பரிசு கொடுத்தாருங். அரசுப் பள்ளிகள்ல படிச்சு மாவட்ட அளவுல முதல் 10 இடங்கள் வர்ற மாணவர்களுக்கு அவங்க விரும்புற பிரைவேட் ஸ்கூல்ல சேர்ந்து படிக்கலாம். அதுக்கான செலவை அரசே ஏத்துக்கும்ங். ஆனா, முதல் மதிப்பெண் வாங்குற அளவுக்கு எங்களைத் தயார் பண்ணதே எங்க கவர்மென்ட் ஸ்கூல்தான்ங். அந்த நன்றிய மறந்துட்டு வேற ஸ்கூல்ல எப்படிப் போய் சேர்றதுங்? அதே ஸ்கூல்ல படிச்சேனுங்.  

டியூஷன் கிளாஸ் போனது இல்லைங். வீட்ல சொல்லித்தரவும் ஆள் இல்லைங். தமிழ் மீடியம்தானுங். ஆனா, ஒரு டைம் புரிஞ்சு படிச்சாலே, மனசுல நிக்கும்ங். 1,165 மார்க்குங். நான் உடம்பால 50 பர்சன்டேஜ் ஹேன்டிகேப்டுங். 'பி.ஹெச்.’ பிரிவுல கட் ஆஃப் மார்க்குல நான்தான் ஃபர்ஸ்ட்டுங். இப்போ எங்க கிளாஸுல 150 பேருங். அதுல நாலஞ்சு பேருதான் தமிழ் மீடியம்ங். அதுல நான் ஒருத்தன்தான் அரசுப் பள்ளியில இருந்து வந்தவனுங்.

அட்மிஷன் ஃபீஸ், ஹாஸ்டல் ஃபீஸ்னு இப்ப வரைக்கும் 32,000 ரூவா செலவா யிடுச்சுங். லோன் போட்ருக்கோம். அது ரெண்டாவது வருஷம்தாம் கிடைக்குமாட்டும் இருக்கு. மூணு அக்கா, ஒரு தம்பிங் எனக்கு. எங்க வீட்லயே நான்தானுங் ஃபர்ஸ்ட் கிராஜுவேட். நான் டாக்டர் படிப்புல சேர்ந்ததுல எங்க வீட்ல எல்லோ ருக்கும் சந்தோஷம்ங்... எனக்கு... எனக்கு... பயம்னு இல்லீங்... ஆனா, எப்படியாவது ஜெயிக்கணும்ங்!''

நிச்சயமா நீ ஜெயிப்ப டாக்டர் கதிர்!