Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"நான் ரோபோ இல்லை தெய்வமே?" - Captcha தொல்லை இனி இல்லை! #InvisibleCaptcha

ணையத்தில் மிக அதிகமாக வெறுக்கும் விஷயங்களைப் பட்டியலிடச் சொன்னால், பாப்-அப் விளம்பரங்களும், அதற்கு அடுத்தபடியாக கேப்ட்சாவும் (CAPTCHA) நிச்சயமாக இடம்பெறும். கேப்பிட்டல் மற்றும் ஸ்மால் லெட்டர்களும், எண்களும் கலந்து இருக்கும் இந்தக் கலவையைப் படித்து, சரியாக அவற்றை என்டர் செய்வதற்குள் தலைசுற்றிவிடும். பல்வேறு இணையதளங்களிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த கேப்ட்சா பயன்படுத்தப்படுகிறது. கேப்ட்சாவை சரியாக என்டர் செய்த பின்னரே, தளத்திற்குள்ளோ அல்லது அடுத்த பக்கத்துக்கோ பயனாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நடிகர் வடிவேலு பாணியில் சொல்வதென்றால் 'டெஸ்ட் வைடா டெஸ்ட்டு' என்பது போலதான் இந்த கேப்ட்சா சின்னதாக ஒரு டெஸ்ட் வைக்கிறது. மனிதர்களால் மேனுவலாக வரும் ரெக்வெஸ்ட்களையும், 'பாட் (Bot)' மூலமாக வரும் ஆட்டோமேட்டட் ரெக்வெஸ்ட்களையும் பிரித்தறியும் வேலையைத்தான் இந்த கேப்ட்சா செய்கிறது.

கேப்ட்சா

கேப்ட்சா ரேண்டமாகக் கேட்கும் சில எளிய கேள்விகளுக்கு, சரியாகப் பதிலளிக்கும் நபர்கள் மட்டுமே வலைதளத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பாட்கள் அனுப்பும் ரெக்வெஸ்ட்களால் கேப்ட்சா கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது. ஏனென்றால், கேப்ட்சாவானது ஒவ்வொரு முறையும் தனது கேள்வியை மாற்றும். மேலும், கேப்ட்சாவின் ஆடியோ மற்றும் எழுத்துகளை மேனுவலாக மட்டுமே படித்து அல்லது கேட்டு பதிலளிக்க முடியும். இதனால் பாட்களால் அந்த வலைதளத்துக்குள் எளிதாக உள்ளே நுழைய முடியாது. இதனால் ஸ்பேம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளிலிருந்து வலைதளத்தைப் பாதுகாக்க முடியும். 

தட்கல் டிக்கெட் புக் செய்யும் நேரத்தில், ஏகப்பட்ட பேர் புக்கிங் செய்வதற்காக ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) தளத்தை ஓப்பன் செய்வது வழக்கம். இதனால் அந்தத்தளம் லோட் ஆக அதிக நேரமாவதையும், வழக்கத்தைவிட அதன் வேகம் குறைவாக இருப்பதையும் கவனித்திருப்போம். இதற்குக் காரணம் ஒவ்வொரு தளத்துக்கும் ஒரு லோடிங் கெப்பாசிட்டி உண்டு. அதையும் தாண்டி அதிகப்பேர் அந்த குறிப்பிட்ட தளத்தை ஒரேநேரத்தில் ஓப்பன் செய்யும்போது, அந்த வலைதளமானது ஹேங் ஆகிவிடும். சில நேரத்தில் சர்வரே கூட டவுன் ஆகிவிடும். பத்தாயிரம் பேர் படிக்கக்கூடிய கெப்பாசிட்டி கொண்ட ஒரு வலைதளத்தை, பாட்கள் மூலம் செயற்கையாக பத்து லட்சம் ரெக்வெஸ்ட்கள் அனுப்பி முடக்க முடியும். இதைத் தடுப்பதற்காக தான் கேப்ட்சா உள்ளிட்ட பல யுக்திகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

Google reCAPTCHA

தொடக்கத்தில் கடினமான காம்பினேஷனில் இருந்த கேப்ட்சா, வெறும் நான்கைந்து எழுத்துகளை டைப் செய்யும் அளவுக்கு மாற்றப்பட்டது. அதன்பின், சில புகைப்படங்களைச் சரியாகத் தேர்வுசெய்யும் அளவுக்கு மேலும் எளிமையாக்கப்பட்டது. தற்போது "I'm not a Robot" என்ற வாசகத்துக்கு அருகேயுள்ள பட்டனை கிளிக் செய்தால் மட்டும் போதுமானது என இதன் பயன்பாடு முன் எப்போதையும் விட எளிமையானது.

கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு இன்விசிபிள் கேப்ட்சாவை அறிமுகப்படுத்தியது. தற்போது செயல்பாட்டுக்கு வந்திருக்கும் இந்த இன்விசிபிள் கேப்ட்சாவானது மனிதர்களிடம் எந்தக் கேள்வியையும் கேட்காது. ஆனால் வலைதளங்களில் பின்புறத்தில் செயல்படும். வலைதளத்துக்குள் நுழையும் IP அட்ரஸ், ஸ்க்ரோல் செய்யும்விதம், டைப்பிங் ஸ்பீடு உள்ளிட்ட அத்தனை செயல்களையும், மெஷின் லேர்னிங் மூலம் கண்காணிக்கும். பாட்கள் வலைதளத்திற்குள் நுழைந்தாலும், மேற்கண்ட விஷயங்களைச் செய்ய முடியாது என்பதால், அவை தடுக்கப்பட்டுவிடும்.

Google ReCAPTCHA

மனிதர்களுக்கு எளிமையானதாகவும், பாட்களுக்குக் கடினமானதாகவும் இந்த இன்விசிபிள் கேப்ட்சா செயல்படும். எனவே, வரும் காலத்தில் 'நான் ரோபோட் அல்ல' என்பதை ஒவ்வொருமுறையும், கணினிக்குச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

கேப்ட்சா பற்றிய வீடியோ:

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement