Published:Updated:

மதுரையில் பால் தரப் பரிசோதனை: பாலில் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளது கண்டுபிடிப்பு!

மதுரையில் பால் தரப் பரிசோதனை: பாலில் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளது கண்டுபிடிப்பு!
மதுரையில் பால் தரப் பரிசோதனை: பாலில் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளது கண்டுபிடிப்பு!

மதுரையில் உள்ள கே.புதூரைத் தொடர்ந்து, மேலூரில் நடத்தப்பட்ட தரப் பரிசோதனையில், தனியார் பாலில் கொழுப்பின் அளவு குறைந்திருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் பால் தரப் பரிசோதனை: பாலில் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளது கண்டுபிடிப்பு!


 

தனியார் பாலில் கலப்படம்செய்யப்படுவதாக தமிழகத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால், பாலில் கலப்படம்குறித்து ஆராய, மதுரை ஆட்சியர் வீர ராகவராவ் தலைமையில் பால் பரிசோதனை முகாம் தொடங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் முழுவதும் ஐந்து கட்டங்களில் பால் தரப் பரிசோதனை நடந்துவருகிறது. முதல் கட்டமாக நடத்தப்பட்ட ஆய்வில், கே.புதூர் பகுதியில் எடுக்கப்பட்ட தனியார் பால் மாதிரியில், சோப்பு ஆயில் கலந்திருப்பது இயந்திரம்மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. 

இரண்டாம் கட்டமாக, மேலூரில் பால் தரப் பரிசோதனை விழிப்புஉணர்வு முகாம் நடைபெற்றுவருகிறது. அந்தச் சோதனையில், பாலில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 3.5 சதவிகிதம் இருக்கவேண்டிய கொழுப்பின் அளவு, 3 சதவிகிதமாக இருப்பது தெரியவந்துள்ளது.

மதுரை மேலூரில் இன்று ஏ.வி.கே.சி மஹாலில்  2ம் கட்ட பால் தரப்பரிசோதனை விழிப்புணர்வு முகாம் உணவு பாதுகாப்பு துறை சார்பாக நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட பால் மாதிரிகளை விவசாயிகள் கொண்டுவந்தனர் . 300 மி.லி அளவுள்ள அந்த பாலை அதிகாரிகள் இயந்திரத்தின் மூலம் சோதனை செய்தனர்.  இதில் ஐந்துக்கும் மேற்ப்பட்ட  மாதிரிகளில் பாலின் தரம் குறைந்துள்ளது தெரியவந்தது.  இதனை தொடர்ந்து உணவுக்கட்டுப்பாடு துறை அதிகாரி அம்சத் கான் இந்த மாதிரிகளை முழு ஆய்வு செய்த பிறகு மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.