Published:Updated:

ஜூன் 14ஆம் தேதிவரை சசிகலா புஷ்பாவைக் கைது செய்யத் தடை!

அருண் சின்னதுரை
ஜூன் 14ஆம் தேதிவரை சசிகலா புஷ்பாவைக் கைது செய்யத் தடை!
ஜூன் 14ஆம் தேதிவரை சசிகலா புஷ்பாவைக் கைது செய்யத் தடை!

சசிகலா புஷ்பா எம்.பி. உள்ளிட்ட 3 பேரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதி மன்றம் மதுரைக் கிளை, அதுவரை கைது செய்ய தடை விதித்துள்ளது.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தன் மீதான பாலியல் புகாரை வாபஸ் வாங்கவேண்டும் என்று  மிரட்டுவதாக டிஜிபி அலுவலகத்தில் சசிகலா புஷ்பா வீட்டில் பணிபுரிந்த பானுமதி என்ற பெண் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா மற்றும் அவர் குடும்பத்தினர்மீது திசையன்விளை காவல்துறையினர் ஆள் கடத்தல், போலி ஆவணம் தயாரித்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், தாயார் கவுரி, ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரத்த உயர்நீதிமன்றம், சசிகலா புஷ்பா உள்ளிட்ட மூன்று பேரையும்  கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. இந்த மனு நீதிபதி ஜெ.நிஷாபானு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் பதில் மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணையை ஜூன் 14ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டதோடு, மூன்று பேரைக் கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிக்கும் என்று தெரிவித்தார்.