Published:Updated:

கலாசாரமிக்க மருமகள்கள் தேடும் ராப்ரி தேவி! வரிந்துக்கட்டிய நெட்டிசன்கள்

ராகினி ஆத்ம வெண்டி மு.
கலாசாரமிக்க மருமகள்கள் தேடும் ராப்ரி தேவி! வரிந்துக்கட்டிய நெட்டிசன்கள்
கலாசாரமிக்க மருமகள்கள் தேடும் ராப்ரி தேவி! வரிந்துக்கட்டிய நெட்டிசன்கள்

தன் இரு மகன்களுக்கும் கலாசாரம் மிக்க மருமகள்கள்தான் வேண்டுமென்றும், அவர்களைத் தேடி வருவதாகப் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்- ராப்ரி தேவி தம்பதியினருக்குத் திருமண வயதில் இரு மகன்கள் உள்ளனர். தற்போது இவர்கள் இருவருக்கும் மணமகள் தேடத் துவங்கியுள்ளார் ராப்ரி தேவி. சமீபத்தில் லாலுவின் 70-வது பிறந்தநாள் அன்று தனக்கு வரப்போகும் மருமகள்கள் குறித்த தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

ராப்ரி தேவி கூறுகையில், ‘எனது மகன்கள் தேஜ், தேஜஸ்வி இருவருக்கும் நல்ல கலாசாரமான பெண்களையே மனைவியாகத் தேர்ந்தெடுப்பேன். ’மால்’களுக்குச் செல்லும் பெண்கள் வேண்டவே வேண்டாம். எங்கள் வீட்டைப் பார்த்துக்கொண்டு, என்னைப் போன்ற பெரியவர்களை மதித்து நடக்கும் பெண்ணே வேண்டும்’ எனக் கூறியுள்ளார். 

இது அவரது சொந்த விருப்பம் என்றபோதும் ராப்ரி தேவியை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 'லாலுவின் மகன்கள், மகள்மீது அதிகளவிலான ஊழல் புகார்கள் உள்ளன’ என்றும், ‘லாலுவின் மகன்கள் இருவருக்குமே சொந்தமாகப் பல மால்கள் இருக்கின்றன’ என்றும் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர்.