Published:Updated:

தெர்மாக்கோல் திட்டம் குறித்து பொதுப்பணித்துறையின் பதில்கள்..!

செ.சல்மான் பாரிஸ்
கார்த்திக் துரைமகாராஜன்.சி
தெர்மாக்கோல் திட்டம் குறித்து பொதுப்பணித்துறையின் பதில்கள்..!
தெர்மாக்கோல் திட்டம் குறித்து பொதுப்பணித்துறையின் பதில்கள்..!

வைகை அணையைத் தெர்மாக்கோல் கொண்டு மூடுவதற்கான திட்டத்தை எந்த அலுவலர்களும் முன்னின்று நடத்தவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பொதுப்பணித்துறை பதிலளித்துள்ளது.

தெர்மாக்கோல் திட்டம் குறித்து பொதுப்பணித்துறையின் பதில்கள்..!

வைகை அணையிலுள்ள நீர் ஆவியாகாமல் தடுப்பதற்காக அணையின் நீர்பரப்பைத் தெர்மாக்கோல் கொண்டு மூடும் முயற்சியைக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஏராளமான அரசு அதிகாரிகள் மேற்கொண்டனர். அப்போது சிறிது நேரத்திலேயே அந்த தெர்மாக்கோல்கள் காற்றின் வேகத்தில் பறந்து சென்றது. அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளின் இந்தச் செயல்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

தெர்மாக்கோல் திட்டம் குறித்து பொதுப்பணித்துறையின் பதில்கள்..!

நெட்டிசன்கள் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ராஜூவை மீம்ஸ் மூலம் வறுத்தெடுத்துவிட்டனர். இந்தநிலையில் மதுரையைச்சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறையிடம் விளக்கம் கேட்டார். அவருடைய கேள்விகளுக்குப் பொதுப்பணித்துறை மழுப்பலாகப் பதிலளித்துள்ளது. அந்த தெர்மாக்கொல் திட்டம் எந்த அதிகாரியால் தயாரிக்கப்பட்டது? திட்டத்தின் மதிப்பு எவ்வளவு? அந்தத் திட்டத்தை முன்னின்று நடத்திய அலுவலர் யார் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.

அந்தக் கேள்விகளுக்கு, இதற்கென்று திட்டம் ஏதும் தயாரிக்கப்படவில்லை. அந்தத் திட்டத்துக்கு 60 தெர்மாக்கோல் மட்டும் பயன்படுத்தப்பட்டது. எந்தவொரு அதிகாரிகளும் அந்தத் திட்டத்தை முன்னின்று செயல்படுத்தவில்லை. இதுகுறித்து வேறு ஏதும் தகவல்கள் இல்லை. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பொது மக்கள் முன்னிலையில் திட்டம் செயல்படுத்தப்பட்டது என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.