Published:Updated:

பெட்ரோல் டீசல் விலையின் தினசரி மாற்றத்தை தெரிந்து கொள்ள இதைப் பண்ணுங்க!

பெட்ரோல் டீசல் விலையின் தினசரி மாற்றத்தை தெரிந்து கொள்ள இதைப் பண்ணுங்க!
பெட்ரோல் டீசல் விலையின் தினசரி மாற்றத்தை தெரிந்து கொள்ள இதைப் பண்ணுங்க!

பெட்ரோல், டீசல் விலையை 15 நாள்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துவருகின்றன. ஆனால், பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலையின் தினசரி மாற்றத்தை தெரிந்து கொள்ள இதைப் பண்ணுங்க!


அதன்படி புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகர் ஆகிய ஐந்து நகரங்களில் சோதனை அடிப்படையில், கடந்த மே 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், இந்த முறையை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் 16 ஆம் தேதி முதல் இந்த முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், பெட்ரோல் விலை மாற்றத்தை தினசரி அறிந்து கொள்ள எண்ணெய் நிறுவனங்கள் ஏற்பாடுகளை செய்துள்ளன.

அதன்படி, தினசரி பெட்ரோல், டீசல் விலை மாற்றத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் Fuel@IOC என்ற ஆப்பை அறிமுகப்படுத்தியது. RSP < SPACE > DEALER CODE to 92249-92249என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியும் தெரிந்து கொள்ளலாம். அதே போல், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் “HPPRICE < SPACE > DEALER CODE” to 9222201122 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் “RSP <SPACE > DEALER CODE” to the number 9223112222 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், 1800 22 4344 என்ற ஹாட் லைன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.