Published:Updated:

வரும் 26 ஆம் தேதிக்குள் நீட் தேர்வு முடிவுகள் வெளிவர வாய்ப்பு!

வரும் 26 ஆம் தேதிக்குள் நீட் தேர்வு முடிவுகள் வெளிவர வாய்ப்பு!
வரும் 26 ஆம் தேதிக்குள் நீட் தேர்வு முடிவுகள் வெளிவர வாய்ப்பு!

நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விதித்திருந்த இடைக்காலத் தடையை ரத்து செய்திருந்தது உச்ச நீதிமன்றம். இதையடுத்து, வரும் 26 ஆம் தேதிக்குள் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்தியா முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினார்கள். இதனிடையே  நீட் தேர்வில் வினாத்தாள்கள் வெவ்வேறு மாதிரியாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. குறிப்பாக, பெங்காலி உள்ளிட்ட மொழி வினாத்தாள் கடினமாக இருந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஒரே மாதிரியான வினாத்தாள்கள் கேட்கப்படவில்லை என்றும், தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கவேண்டும் என்றும் திருச்சியைச் சேர்ந்த சக்தி மலர்க்கொடி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த பின், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து சி.பி.எஸ்.இ, உச்ச நீதிமன்றத்தில் தடையை நீக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தது. 

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'உயர் நீதிமன்றம் சி.பி.எஸ்.இ-யின் அட்டவணையில் இவ்வளவு சுலபமாக தலையிட்டு இருக்கக் கூடாது. எனவே, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குகிறோம்' என்று தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் தடையை நீக்கியவுடன் சி.பி.எஸ்.இ, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விரைந்து செயல்பட்டு வருகின்றது. எனவே வரும் 26 ஆம் தேதிக்குள் நீட் தேர்வு முடிவு வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.