Published:Updated:

லோக்பால் அல்ல; ஜோக்பால்!

பூ.கொ.சரவணன்படம் : ப.சரவணகுமார்

##~##

ர்விந்த் கேஜரிவால். அண்ணா ஹஜாரேவின் தளபதிகளில் முக்கியமானவர். அர்விந்த், ஒரு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரி. வருவாய்த் துறையில் பணியாற்றியவர். சமூகத்தின் தேவைகளுக்காகத் தன் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு, போராளி அவதாரம் எடுத்தவர். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அர்விந்த் வெளிக்கொணர்ந்த ஊழல்கள் ஏராளம். ஐ.ஐ.டி -யில் மாணவர்களோடு கலந்துரையாடுவதற்காக சென்னை வந்திருந்த அர்விந்தைச் சந்தித்தேன்.

 ''எப்படி இருக்கிறது மத்திய அரசின் லோக்பால் மசோதா?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''அது லோக்பால் மசோதா கிடையாது; ஜோக்பால்! இந்த மசோதாவால் எந்த ஊழலையும் ஒழிக்க வாய்ப்பு இல்லை. கர்நாடக ரெட்டி சகோதரர்களின் ஊழல் கள், பொது விநியோகத் திட்ட முறையில் நடக்கும் ஊழல்கள், அதிகாரிகள் மட்டத்தில் நடக்கும் லஞ்ச லாவண்யங்கள் எதையும் இது ஒழிக்கப்போவது இல்லை. ஏனென்றால், இந்த மசோதாவின் கீழ் மாநில அரசு ஊழியர்கள் வர மாட்டார்கள். 'குரூப் ஏ’ - வுக்கு கீழ் உள்ள அதிகாரிகளும் வர மாட்டார்கள். ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளும் வரப்போவது இல்லை. ஆனால், நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டை நீங்கள் நிரூபிக்காவிடில், உங்களுக்கு இரண்டு ஆண்டு சிறை நிச்சயம். ஆக, ஊழலுக்கு எதிராகக் குரல் எழுப்புவோரை அச்சுறுத் தவே இந்த மசோதா கொண்டுவரப்படு கிறது!''

லோக்பால் அல்ல; ஜோக்பால்!

''ஊழலுக்கு வாரிசு அரசியலும் மிக முக்கியக் காரணம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். ஆனால், உங்கள் குழுவிலும் வாரிசு முறைகேடு நிகழ்வதாகக் கூறும் பாபா ராம்தேவ்வின் குற்றச்சாட்டுக்குத் தங்கள் பதில்?''

''நிச்சயம் இல்லை. சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன் இருவரும் மிகச் சிறந்த சட்ட வல்லுநர்கள். மேலும், இந்த மசோதாவை  உருவாக்குவதன் மூலம் அவர்கள் எந்த சுயலாபத்தையும் பெறப்போவது இல்லை என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்!''

''மத்திய ஊழல் தடுப்பு ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் போன்ற அமைப்புகளில் நேர்மையற்றவர்கள் அமரும்போது ஏற்படும் அதே நிலைமை, ஏன் லோக்பால் அமைப்புக்கும் ஏற்படாது?''

''இப்போதைய அரசாங்க மசோதா நிறைவேறினால் நிச்சயம் அதுதான் நிகழும். ஆனால், நாங்கள் வரைவுசெய்துள்ள ஜன் லோக்பால் மசோதா வெளிப்படையானது. அது செயலாக்கம் பெற்றால், லோக்பால் அமைப்பைக் காக்க முடியும்!''

''ஹஜாரேவின் போராட்டத்தைத் தடுக்க, ராம்தேவ் போராட்டத் தடுப்பு முறைகளையே அரசு கையாளும் என்று கூறப்படுகிறது. எப்படிச் சமாளிக்கப்போகிறீர்கள்?''

''இது மக்கள் போராட்டம். மக்கள் துணையுடன் இதை எதிர்கொள்வோம்!''