'இன்ஜினியரிங் புராஜெக்ட் செய்வது எப்படி?' - ஒரு கையடக்க நோட்ஸ்! | A satirical article about final year engineering students project

வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (13/06/2017)

கடைசி தொடர்பு:11:26 (14/06/2017)

'இன்ஜினியரிங் புராஜெக்ட் செய்வது எப்படி?' - ஒரு கையடக்க நோட்ஸ்!

புராஜெக்ட்

'நான் இன்ஜினியரிங் படிக்கிறேன்'னு வெளியே சொன்னா 'ஐயோ! அதுக்கெல்லாம் இப்ப மதிப்பே இல்லையேப்பா. வேலை கிடைக்குமா?'னு சிண்டு சிறுசுக தொடங்கி பெரியவங்க வரைக்கும் சொல்லி வச்ச மாதிரி ஒரே கேள்வி கேப்பாங்க. அப்படி பெருமை மிக்க ஒரு பட்டப்படிப்பு இந்த இன்ஜினியரிங். இந்த பொறியியல் படிப்பை படிக்க ஒரு தனித்திறமையும் டன் எடைல மூளையும் வேணும். அப்படி படிக்கிற நாலு வருஷங்கள்ல கடைசி வருஷம் மட்டும் வித்தியாசக் கொண்டாட்டமா இருக்கும். காரணம், 'புராஜெக்ட்'. அந்த ஆறு மாச டைம்லைன்ல இவங்க செய்யுற அலப்பறைகள் இருக்கே! அடடடடா! 
    
எட்டாவது செமஸ்டர்ல வலது காலை எடுத்து வச்சு என்ட்ரி ஆனதுமே இந்த புராஜெக்ட் பேச்சும் ஆரம்பிக்கும். இருக்கிற எல்லாரையும் நாலு நாலு பேரா க்ரூப் சேர்த்துவிட்டு 'போய் புராஜெக்ட் பண்ணித் தொலைங்கடா'னு அனுப்பி வச்சுருவார் நம்ம தல. (அதாங்க H.O.D). புராஜெக்ட்டோட முதல் ஸ்டெப் டைட்டில் வைக்குறது. வேற ஒண்ணும் இல்லைங்க, நம்ம செய்யப்போற புராஜெக்ட் இதுதான்னு சொல்லி, அதுக்கு ஒரு நல்ல பேர் சூட்டி வாயில சக்கரைத் தண்ணி வைக்கிறது. அதுக்கு இந்த நாலு பேரும் சும்மா சுத்தி உக்காந்து, எதோ நிலவுக்கு ராக்கெட் விடப்போற மாதிரியே பேசி பிளான் போட்டு, பேர் வச்சு, அதுக்கு ஹெச்.ஓ.டி.கிட்ட கெஞ்சிக் கதறி சம்மதமும் வாங்கிடுவாங்க.
    
அடுத்து என்ன? புராஜெக்ட் பண்ணணுமே. புராஜெக்ட் பண்ணணும்னா அதுக்கு தேவையான மூலப்பொருள்கள் எல்லாம் வேணுமே. மறுபடியும் இந்த நாலு பேர் சுத்தி உக்காந்து, மாசக்கடைசில வீட்ல மளிகை பொருள் வாங்க லிஸ்ட் போடுற மாதிரி, மிளகு நூறு கிராம், உப்பு தேவையான அளவுனு லிஸ்ட் போடுவாங்க. அடுத்து அந்த பொருட்கள் எல்லாம் வாங்க எவ்வளவு செலவாகும்னு கணக்கு போடுவாங்க. அதை நாலு பாகமா பிரிச்சு அதுக்கும் கொஞ்சம் அதிகமா சொல்லி வீட்டுல காசு தேத்துவாங்க. அப்புறம்....? இவ்ளோ நேரம் யோசிச்சதுல மூளை டயர்டாகி தூங்கப் போயிருக்குமே. அதை எழுப்ப தியேட்டர், மால்னு போகணும்ல?
    
எல்லாப் பொருட்களும் வாங்கினதுக்கு அப்புறம்...? அடுப்பை பத்த வச்சு கிண்ட வேண்டியதுதான். ஆர்வக்கோளாறுல புராஜெக்ட்டுக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்களை எல்லாம் வாங்கியிருப்போம். சரி, வேஸ்ட் ஆகக்கூடாதேனு அதை எல்லாம் சேர்த்து மிக்ஸில அடிச்சு கலந்தா எது மாதிரியும் இல்லாம புது மாதிரி புராஜெக்ட் ஒண்ணு உருவாகி பல்லிளிக்கும். மாத்துறதுக்கு மனசு வர்றதுக்குள்ள ரிவ்யூவே வந்துடும். 
    
வேற என்ன பண்ண? சர்வதேச வழியை பின்பற்ற வேண்டியதுதான்! நைட்டோட நைட்டா பக்கத்துல இருக்குற புராஜெக்ட் சென்டர்ல ஒண்ணை அஞ்சுக்கும் பத்துக்கும் வாங்கி அடுத்த நாள் ஹெச்.ஓ.டி முன்னால வச்சுடுவோம். அதை மேலயும் கீழேயும் பார்த்துட்டு, 'என்னடா பாகுபலி பூ சுத்திட்டு புலியை எடுத்து வச்சுருக்கீங்க?'னு மானக்கேடா கேட்பாரு. 'அட, அந்த ஆங்கிள்ல இருந்து பார்த்தா எப்படித் தெரியும்? இந்த ஆங்கிள்ல பாருங்க அங்கிள்'னு அவரைக் குழப்பி ஒருவழியா மார்க் வாங்கி பாஸாகிடுவாங்க. இதுதானே பாஸ் காலங்காலமா நடக்குது!   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்