Published:Updated:

இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு கப்பற்படைப் பயிற்சி!

வெங்கட சேது.சி
இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு கப்பற்படைப்  பயிற்சி!
இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு கப்பற்படைப் பயிற்சி!
இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு கப்பற்படைப்  பயிற்சி!

ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில், இந்தியப் போர்க்கப்பல்கள் கூட்டு கப்பற்படைப் பயிற்சிக்கு இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.

'ஆஸின்டெக்ஸ்' என்ற பெயரிலான இந்தப் பயிற்சியின்மூலம் இரு நாடுகளின் கப்பற்படையின் திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடியும். இப்போது நடைபெற இருப்பது, இரண்டாவது போர்க்கப்பல் பயிற்சியாகும். ஏற்கெனவே, இந்தியப் பெருங்கடலில் இருநாடுகளின் போர்க்கப்பல்கள் இடம்பெற்ற கூட்டுப்பயிற்சி, 2015ஆம் ஆண்டில் நடைபெற்றது.

 இரண்டாவது கூட்டுப் பயிற்சிக்கு கடந்த வாரம் இந்தியா மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது சம்மதம் தெரிவித்திருப்பதாக புதுடெல்லி பாதுகாப்புப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பெருங்கடல் பகுதியில், மிகப் பெரிய நாடுகளாகத் திகழும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும், கடலோரப் பாதுகாப்பில் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.