Election bannerElection banner
Published:Updated:

கடன் நெருக்கடியில் தவிக்கும் ரிலையன்ஸ்: அனில் அம்பானியின் புதிய முடிவு..!

கடன் நெருக்கடியின் காரணமாக, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சேர்மன், நடப்பு நிதியாண்டில் அந்த நிறுவனத்திலிருந்து சம்பளம் ஏதும் பெறப்போவதில்லை என்று முடிவுசெய்துள்ளார். 

கடன் நெருக்கடியில் தவிக்கும் ரிலையன்ஸ்: அனில் அம்பானியின் புதிய முடிவு..!

தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதித்துள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், தற்போது கடுமையான கடன் நெருக்கடியில் தவித்துவருகிறது. அந்த நிறுவனம் பெற்றுள்ள சுமார் 45,000 கோடி ரூபாய் அளவிலான கடன் தொகையை இந்த ஆண்டு இறுதிக்குள் திரும்பச் செலுத்தவேண்டும் என்று கடன் அளித்தவர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். இந்தக் கடன் நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, அனில் அம்பானி புதிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

அதில் ஒன்று,  நடப்பு நிதியாண்டில் நிறுவனத்திலிருந்து தனக்கு சம்பளம் பெறப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. மேலும், ஏர்செல் மற்றும் ப்ருக்ஃபீல்டு ஆகிய நிறுவனங்களுடன் செய்துள்ள ஒப்பந்தத்தினால் 60 சதவிகித அளவுக்கு கடன் சுமை குறையும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு