Published:Updated:

ஜிஎஸ்டி அமலாக்கத்தை ஒத்திவைக்க முடியுமா? விமான அமைச்சகம் கோரிக்கை!

ஜிஎஸ்டி அமலாக்கத்தை ஒத்திவைக்க முடியுமா? விமான அமைச்சகம் கோரிக்கை!
ஜிஎஸ்டி அமலாக்கத்தை ஒத்திவைக்க முடியுமா? விமான அமைச்சகம் கோரிக்கை!

'ஜிஎஸ்டி அமல்படுத்துவதை செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்க முடியுமா' என விமானப் போக்குவரத்து அமைச்சகம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

'ஜிஎஸ்டி' என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டுவரும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரிகளை (Goods and Services Tax) அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில், ஜிஎஸ்டி அமல்படுத்துவதை செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குத் தள்ளி வைக்கக்கோரியுள்ளது, உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம். இதுதொடர்பான கோரிக்கையையும், விளக்கத்தையும் மத்திய நிதி அமைச்சகத்திடம் விமான அமைச்சகம் அளித்துள்ளது. சர்வதேச விமானங்களுக்குப் பயணச்சீட்டு வழங்கும் முறையில் மாற்றங்கள்செய்வதற்குக் காலதாமதமாவதால், கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது. இந்தப் பயணச்சீட்டு விநியோக முறையில், ஜிஎஸ்டி வரி விதிப்பையும் சேர்த்து வழங்குவதற்கான மென்பொருள் மாற்றப் பணிகள் செய்யவே அவகாசம் தேவைப்படுகிறது என விளக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள அத்தனைத் துறைகளிலும் ஒரே நாளில் ஜிஎஸ்டி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சகத்தின் முக்கியத் துறையான விமானப் போக்குவரத்துத்துறையே கால அவகாசம் கேட்டு ஒத்திவைக்க வேண்டுகோள் வைத்துள்ளது.