Published:Updated:

நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க: புதிதாகக் கம்பு சுழற்றும் தீபா!

கார்த்திக் துரைமகாராஜன்.சி
நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க: புதிதாகக் கம்பு சுழற்றும் தீபா!
நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க: புதிதாகக் கம்பு சுழற்றும் தீபா!

தீபா பேரவை சார்பில், டெல்லி தேர்தல் ஆணையத்தில் 52,000 பக்கங்கள்கொண்ட பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. 


ஜெயலலிதா மறைவுக்குப்  பிறகு எழுந்த பிரச்னைகளை அடுத்து, அ.தி.மு.க கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. அந்த சின்னத்தைக் கைப்பற்றுவதற்காக, சசிகலா அணியும்  ஓ.பன்னீர்செல்வம் அணியும் மாறிமாறி தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல்செய்துவருகின்றனர். இந்த நிலையில், திடீரென தீபா பேரவையின் சார்பிலும் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்யப்பட்டது.

அ.தி.மு.க நிர்வாகிகளிடமிருந்து கையெழுத்துப் பெறப்பட்டு, 52,000 பக்கங்கள்கொண்ட பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள், தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க என்றும் தேர்தல் ஆணையம் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.